சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

ஹட்டன் பொலிஸாரின் 5-ஆவது இரத்ததான முகாம்!

சுமி•4 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ஹட்டன் பொலிஸாரின் 5-ஆவது இரத்ததான முகாம்!

ஹட்டன் பொலிஸாரின் 5-ஆவது இரத்ததான முகாம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கை பொலிஸாரின் 160ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பொதுமக்களுக்காக முன்னெடுக்கப்படும் சமூக சேவை நிகழ்ச்சித் தொடரின் கீழ் ஹட்டன் தலைமையக பொலிஸாரால் ஐந்தாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட இரத்ததான முகாம் நேற்று (03) ஹட்டன் தலைமையக பொலிஸ் வளாகத்தில் நடைபெற்றது.

காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்ற இந்த இரத்ததான நிகழ்ச்சியின் பிரதான நோக்கம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு தேவையான இரத்தத்தை வழங்கி மனிதாபிமான பணியில் பங்களிப்புச் செய்வதாகும். சட்டம் மற்றும் அமைதியைப் பாதுகாக்கும் நிறுவனமாக மட்டுமன்றிஇ பொதுமக்களின் தேவைகளை அடையாளம் கண்டு அவர்களுடன் நெருக்கமாகச் செயற்படும் நிறுவனமாகவும் பொலிஸார் செயற்படுகின்றனர் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட்டுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
சுமி

சுமி

செய்தி ஆசிரியர்

அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm