சுவிஸ்: 7°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

சபரிமலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு: பல ஆண்டுகளுக்குப் பின் சரஸ்வதி பூஜைக்கு நடை திறப்பு!

VIGNESWARAN ABIRAMY•16 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சபரிமலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு: பல ஆண்டுகளுக்குப் பின் சரஸ்வதி பூஜைக்கு நடை திறப்பு!

சபரிமலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு: பல ஆண்டுகளுக்குப் பின் சரஸ்வதி பூஜைக்கு நடை திறப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு நவராத்திரி மற்றும் சரஸ்வதி பூஜை வழிபாடுகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ளது.

வழக்கமாக மாதாந்திர பூஜைகள் மற்றும் மண்டல - மகரவிளக்கு மகோற்சவ காலங்களில் மட்டுமே கோயில் நடை திறக்கப்படும் நிலையில், இந்த சிறப்புத் திறப்பு பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, ஐயப்பன் சந்நிதியில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் மற்றும் குழந்தைகளுக்கு 'வித்யாரம்பம்' (ஏடு தொடங்குதல்) நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. பக்தர்களின் வருகை அதிகளவில் இருக்கும் எனக் எதிர்பார்க்கப்படுவதால், தேவையான குடிநீர், தங்குமிடம் மற்றும் தரிசனப் வரிசை போன்ற அடிப்படை வசதிகளைத் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி பதிவு மூலமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

சர்வதேசத் திரைப்படத் துறையில் தனது துணிச்சலான படைப்புகளால் அறியப்பட்ட புகழ்பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஜனநாயகத்தைப் பாதுகாக்க டெல்லி பேரணி – ராகுல் காந்தி அழைப்பு!

இந்தியாவில் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க, நவம்பர் முதலாம் திகதி டெல்லியில் நடைபெறவுள்ள ராம்லீலா பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சேதமடைந்த அணு உலைகளைச் சீரமைக்காத ஈரான்! IAEA வெளியிட்ட முக்கிய தகவல்!

இராணுவத் தாக்குதல்களால் சேதமடைந்த தனது அணு உலைகளையோ அல்லது அணுசக்தி மையங்களையோ சீரமைப்பதற்கோ அல்லது மீண்டும் கட்டுவதற்கோ ஈரான் எந்தவித முயற்சியும் செய்யவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் கிராசி தெரிவித்துள்ளார்.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நெதன்யாகு ஆட்சியை வீழ்த்தத் திட்டம்! எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளிக்க அரபுக்கட்சிகள் தயார்!

இஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக எதிர்க்கணிகளுக்கு ஆதரவளிக்க அரபுப் பிராந்தியக் கட்சிகள் முன்வந்துள்ளன.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm