சுவிஸ்: 11°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

"சிறையில் இம்ரான் கான் உயிருக்கு ஆபத்து"பாகிஸ்தான் அரசு மீது மகன்கள் பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஆகாஷ்•27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
"சிறையில் இம்ரான் கான் உயிருக்கு ஆபத்து"பாகிஸ்தான் அரசு மீது மகன்கள் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"சிறையில் இம்ரான் கான் உயிருக்கு ஆபத்து"பாகிஸ்தான் அரசு மீது மகன்கள் பகிரங்கக் குற்றச்சாட்டு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும், அவர் உயிருடன் திரும்புவது சந்தேகமே என்றும் அவரது மகன்கள் லண்டனில் நடத்திய இணையவழி செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும், அவர் உயிருடன் திரும்புவது சந்தேகமே என்றும் அவரது மகன்கள் லண்டனில் நடத்திய இணையவழி செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.


பாகிஸ்தானில் ராணுவத்தின் தலையீடு அதிகரித்து நாட்டைக் கடுமையான சர்வாதிகாரப் பாதையை நோக்கி ராணுவத் தளபதி ஆசிம் முனீர் தலைமையிலான அரசு தள்ளிவருவதாக மூத்த மகன் சுலைமான் ஈசா கான் கடுமையாக விமர்சித்துள்ளார்.


மேலும் இம்ரான் கானுக்குத் தனியார் மருத்துவமனையில் உரிய மருத்துவப் பரிசோதனைகள் வழங்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பாகிஸ்தான் அரசு முறையாகச் செயல்படுத்தவில்லை என இளைய மகன் காசிம் கான் குற்றம் சாட்டியுள்ளார்.


மிகச் சிறிய தனிமைச் சிறையில் இயற்கை வெளிச்சம் கூட இல்லாமல் இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ளார். இத்தகைய கொடூரமான சூழ்நிலையில் அவர் தொடர்ந்து சிறையில் இருந்தால் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என மகன்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


அத்துடன் இம்ரான் கானை சிறையில் வைத்திருக்கும் விதம், திட்டமிடப்பட்ட 'மெதுவான கொலை முயற்சிக்கு' ஒப்பானது என சர்வதேச வழக்கறிஞர் ஜாரெட் கென்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள 73 வயதான இம்ரான் கானைச் சந்திக்க அவரது மகன்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
ஆகாஷ்

ஆகாஷ்

முதன்மை ஆசிரியர்

அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஈரானுக்கு எதிரான போர் தொடரும்! எச்சரிக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

தான் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஈரானுக்கு எதிரானப் போர் தொடர்ந்து தீவிரமாகப் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்!

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் - 7 வயது சிறுமி பரிதாப பலி!

காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 வயது சிறுமி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ராணுவம் குறித்த போலி வீடியோ விவகாரம் - காங்கிரஸுக்கு மத்திய அமைச்சர் கடும் கண்டனம்!

போலி வீடியோக்கள் மூலம் இந்திய ராணுவத்தின் நற்பெயருக்குக் கலங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சிக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்!

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm