சுவிஸ்: 22°C
•
இலங்கை: 29°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஜப்பான் கைகொடுக்கும்: ஜப்பானியத் தூதுவர் தெரிவித்த உறுதியான செய்தி!

செந்தில் குமார்•18 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஜப்பான் கைகொடுக்கும்: ஜப்பானியத் தூதுவர் தெரிவித்த உறுதியான செய்தி!

இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஜப்பான் கைகொடுக்கும்: ஜப்பானியத் தூதுவர் தெரிவித்த உறுதியான செய்தி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தொடர்ந்தும் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமாத்தா தெரிவித்துள்ளார்.

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தொடர்ந்தும் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமாத்தா தெரிவித்துள்ளார். 


கண்டி - மெவதும்பர பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்ற டித்வா அனர்த்தங்களால் வீடுகளை இழந்த 63 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட இடைக்கால வீடுகளை மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்ட நிகழ்வு, ரங்கலை தோட்டத்தில் நேற்று (17) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


ஜப்பான் தூதுவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இலங்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவது ஜப்பானின் எதிர்பார்ப்பாகும். ஒவ்வொரு குடும்பத்தையும் மீளக்கட்டியெழுப்ப இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை எனத் தெரிவித்தார். 


நிரந்தர வீடுகள் நிர்மாணிக்கப்படும் வரை தற்காலிக தீர்வாக இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வீடமைப்புத் திட்டத்துக்காக ஜப்பானிய அரசாங்கம் வழங்கிய நிதி உதவிக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியதையும், இலங்கை விமானப்படை இதற்காக வழங்கிய பூரண பங்களிப்பையும் அவர் இதன்போது நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
செந்தில் குமார்

செந்தில் குமார்

முதன்மை ஆசிரியர் (Chief Editor)

கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

எவன்கார்ட் விவகாரம்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் சி.ஐ.டி.யிடம் முறைப்பாடு செய்ய கோப் குழு தீர்மானம்!

இலங்கை கடற்படையுடன் இணைந்து 'ரக்னா அரக்ஷக லங்கா' பாதுகாப்பு நிறுவனம் முன்னெடுத்து வந்த கடல்சார் பாதுகாப்பு சேவையில் எவன்கார்ட் (Avant-Garde) நிறுவனத்தைச் சேர்த்துக் கொண்டமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழு (கோப் குழு) தெரிவித்துள்ளது.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாட்டிற்குள் கடத்தப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: சீனப் பிரஜைகள் இருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டது: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு!

நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த தியாகி திலீபனின் உருவச்சிலை, இன்று காலை பொலிஸாரால் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாட்டில் பல இடங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm