சுவிஸ்: 15°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

பேராதனையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் தடம் புரண்டு விபத்து - மலைநாட்டு ரயில் சேவை பாதிப்பு!

VIGNESWARAN ABIRAMY•5 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
பேராதனையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் தடம் புரண்டு விபத்து - மலைநாட்டு ரயில் சேவை பாதிப்பு!

பேராதனையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் தடம் புரண்டு விபத்து - மலைநாட்டு ரயில் சேவை பாதிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி அலுவலக ரயில், இன்று (அக்டோபர் 05) அதிகாலை 4.40 மணியளவில் கங்கொட மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ரயில் பாதையில் திடீரென ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்கள் விழுந்திருந்தமையினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக மலையகப் பாதையிலான அனைத்து ரயில் சேவைகளும் கடும் தாமதங்களை எதிர்நோக்கியுள்ளன.

'டிட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்டுப் புனரமைக்கப்பட்ட பின்னர், பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த முதலாவது அலுவலக ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், ரயிலின் முன்பகுதிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்த ரயிலின் சாரதி டீ.ஏ.பி. செந்தநாயக, "பாதையின் குறுக்கே மண்சரிந்து விழுந்திருந்ததை நாங்கள் காணும்போது 10 மீற்றர் தூரம்கூட இருக்கவில்லை. மண் திட்டில் மோதிய வேகத்தில் பாறையொன்றிலும் மோதியே ரயில் சேதமடைந்தது" எனத் தெரிவித்தார்.

தடம்புரண்ட ரயிலை மீட்கும் மற்றும் பாதையை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கையில் டெங்கு உயிரிழப்புகள் 78 ஆக உயர்வு!

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

5 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கும் விசித்திர வைரஸ்!

மாத்தறை - ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களிடையே வைரஸ் காய்ச்சல் ஒன்று அதிவேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, அங்குப் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.

5 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கைதாகாமல் இருக்க முன் பிணை மனுத் தாக்கல் செய்த ஷிராந்தி ராஜபக்ச!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியும், முன்னாள் முதன்மைப் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ச, தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றத்தில் முன் பிணை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

5 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஞானசார தேரருக்கு எதிரான சிறைத் தண்டனையை அமல்படுத்த அறிவுறுத்தல்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் தம்பற அமுதே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட எஞ்சிய சிறைத் தண்டனைக் காலத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm
பேராதனையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் தடம் புரண்டு விபத்து - மலைநாட்டு ரயில் சேவை பாதிப்பு! | அக்கினி செய்தி | Akkini News