சுவிஸ்: 15°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

லிட்ரோ சமையல் எரிவாயு விலையை மாற்ற வேண்டாம் என முடிவு!

VIGNESWARAN ABIRAMY•4 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
லிட்ரோ சமையல் எரிவாயு விலையை மாற்ற வேண்டாம் என முடிவு!

லிட்ரோ சமையல் எரிவாயு விலையை மாற்ற வேண்டாம் என முடிவு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ஒக்டோபர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு உருளைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, சந்தையில் நடைமுறையிலுள்ள பழைய விலையிலேயே சமையல் எரிவாயு உருளைகள் விற்பனை செய்யப்படும்.

விலை விபரம்:

12.5 கிலோகிராம்: ரூ. 4,365

5 கிலோகிராம்: ரூ. 1,750

2.3 கிலோகிராம்: ரூ. 815

உலகச் சந்தையில் நிலவும் விலை மாற்றங்களுக்கு அமைவாக மாதாந்தம் எரிவாயு விலை திருத்தம் செய்யப்படுகின்ற போதிலும், இம்மாதம் விலையை உயர்த்தாமல் பழைய விலையிலேயே தொடர முடிவெடுத்துள்ளது நுகர்வோருக்குச் சற்று ஆறுதலை அளித்துள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கையில் டெங்கு உயிரிழப்புகள் 78 ஆக உயர்வு!

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

5 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கும் விசித்திர வைரஸ்!

மாத்தறை - ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களிடையே வைரஸ் காய்ச்சல் ஒன்று அதிவேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, அங்குப் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.

5 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கைதாகாமல் இருக்க முன் பிணை மனுத் தாக்கல் செய்த ஷிராந்தி ராஜபக்ச!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியும், முன்னாள் முதன்மைப் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ச, தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றத்தில் முன் பிணை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

5 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஞானசார தேரருக்கு எதிரான சிறைத் தண்டனையை அமல்படுத்த அறிவுறுத்தல்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் தம்பற அமுதே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட எஞ்சிய சிறைத் தண்டனைக் காலத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm