சுவிஸ்: 17°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

ஈழத்தமிழர் நிலை போன்று மலையக தமிழருக்கும் வரக்கூடாது - ஐ.நா.வதிவிட ஒருங்கிணைப்பாளரிடம் மனோ கணேசன் வலியுறுத்து!

நிவேதினி•22 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ஈழத்தமிழர்  நிலை போன்று மலையக தமிழருக்கும் வரக்கூடாது - ஐ.நா.வதிவிட ஒருங்கிணைப்பாளரிடம் மனோ கணேசன் வலியுறுத்து!

ஈழத்தமிழர் நிலை போன்று மலையக தமிழருக்கும் வரக்கூடாது - ஐ.நா.வதிவிட ஒருங்கிணைப்பாளரிடம் மனோ கணேசன் வலியுறுத்து! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இறுதிக்கட்டப் போரின் போது ஈழத்தமிழர்களைக் கைவிட்டு, அந்தப்போர் சாட்சியம் இல்லாத போராக மாறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை காரணமாக அமைந்தது. அதேபோன்று மலையக தமிழர்களையும் ஐ.நா. கைவிட்டுவிடக்கூடாது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் ஐ.நா.வதிவிட ஒருங்கிணைப்பாளரிடத்தில் வலியுறுத்தியுள்ளார்.


 

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரும் ஐ.நா.செயலாளரின் நேரடி பிரதிநிதியுமான மார்க் அன்ரே பிரஞ்சேவுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் எம்பி மற்றும் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பாரத் அருள்சாமி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

புதிய மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகார சபை என்ற பெயரில் அரசாங்கம், மலையக தமிழ் மக்களின் காணி உரிமையை மறுக்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது. நீர் பிடிப்பு, புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை காலநிலை சார்ந்த காரணங்களைக் காண்பித்து, மலைநாட்டில் தமிழ் மக்களுக்கு உறுதியளிக்கப்பட்ட காணி உரிமையை மறுக்க அரசாங்கம் முயல்கிறதோ என்ற நியாயமான சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

 

இயற்கை காலநிலை காரணங்கள் எமக்கும் ஏற்புடையவைதான். ஆனால், மனிதர்கள் இயற்கையோடு இணைந்து எப்போதும் வாழ்ந்து வருகிறார்கள். ஒட்டுமொத்த மத்திய மலைநாட்டு மாவட்டங்களில் வாழும் சுமார் முப்பது இலட்சம் மக்களையும் அவ்விடங்களிலிருந்து வெளியேற்ற முடியாது. ஆகவே, ஏனைய அனைத்து இன மக்களுடனும் இணைந்து எமது மக்களும் காணி உரிமைகளைப் பெற்று அங்கேயே வாழ வழிசெய்யப்பட வேண்டும். என தெரிவித்தார்.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
நிவேதினி

நிவேதினி

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் செய்தி ஆசிரியர். கலாச்சாரம், கலை, கல்வி மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

அனோஜனின் உயிரைப் பாதுகாக்க மிக அவதானமான நகர்வு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞனான சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மிக அவதானமாகவே முன்னெடுக்க வேண்டும். அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் தீவிர இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

7 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

விசா இல்லாத பயணத்துக்கு இலங்கை, தாய்லாந்து இணக்கம்!

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் பயணங்களை எளிதாக்கவும், சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

7 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையில் வறுமை இரட்டிப்பானதாக உலக வங்கி அறிவிப்பு!

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்தில் வறுமை நிலை இரட்டிப்பாக உயர்ந்ததாகவும், சுமார் 20 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm