சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

"யானை - மனித மோதலைத் தடுக்க நவீன 'AI' தொழில்நுட்பப் பாதுகாப்புப் பொறிமுறை அறிமுகம்!"

VIGNESWARAN ABIRAMY•14 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
"யானை - மனித மோதலைத் தடுக்க நவீன 'AI' தொழில்நுட்பப் பாதுகாப்புப் பொறிமுறை அறிமுகம்!"

"யானை - மனித மோதலைத் தடுக்க நவீன 'AI' தொழில்நுட்பப் பாதுகாப்புப் பொறிமுறை அறிமுகம்!" குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நாட்டில் நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் யானை - மனித மோதலைத் தடுப்பதற்கு, நவீன செயற்கை நுண்ணறிவு எனப்படும் 'AI' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் புதிய பாதுகாப்புப் பொறிமுறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான ஆரம்பகட்டக் கலந்துரையாடலும் கள ஆய்வும், சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் மற்றும் சீனாவின் 'ஹுவாவெய்' நிறுவனப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கல்கமுவ பகுதியில் நடைபெற்றுள்ளது.

சீனாவில் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வரும் இந்த நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம், காட்டு யானைகளின் உடல் அளவு மற்றும் நடமாட்ட முறைகளை அடையாளம் காணக்கூடிய 'AI' கெமரா கட்டமைப்புகள் நிறுவப்படவுள்ளன.

 இதன் ஊடாக, யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதற்கு முன்னரே அவற்றை இனங்கண்டு, எச்சரிக்கை சமிக்ஞைகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் அப்பகுதி மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்க முடியும்.

இலங்கையின் புவியியல் அமைப்பு மற்றும் யானைகளின் வழித்தடங்களுக்கு ஏற்ப இந்தக் கெமரா கட்டமைப்புகளைப் பொருத்துவது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm