நாமல் ராஜபக்ஷவின் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: காரசாரக் குற்றச்சாட்டு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் கைது நடவடிக்கையானது, தற்போதைய அரசாங்கத்தின் தோல்விகளையும் ஊழல்களையும் மறைப்பதற்காக அரங்கேற்றப்பட்ட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க தெரிவித்தார்.
கொழும்பில் சனிக்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நீதிமன்றத்தால் ஏற்கனவே பொய்யான சாட்சியாளர் என அறிவிக்கப்பட்ட நிமல் பெரேரா எனும் வர்த்தகரின் வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 100 வழக்குகள் நிலுவையில் உள்ள குறித்த வர்த்தகர், தற்போதைய அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்தின் பிரதான அமைச்சர் ஒருவரின் வர்த்தகப் பங்காளியாவார்.
குறித்த நபர் 50 மில்லியன் ரூபா கொடுத்ததாக முதலில் கூறி, பின்னர் ஒரு ரூபாயும் கொடுக்கவில்லை என மறுத்து, தற்போது 100 மில்லியன் ரூபா கொடுத்ததாக 3 வெவ்வேறான முரண்பாடான வாக்குமூலங்களை அளித்துள்ளார். என தெரிவித்தார்.
செந்தில் குமார்
முதன்மை ஆசிரியர் (Chief Editor)கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
எவன்கார்ட் விவகாரம்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் சி.ஐ.டி.யிடம் முறைப்பாடு செய்ய கோப் குழு தீர்மானம்!
இலங்கை கடற்படையுடன் இணைந்து 'ரக்னா அரக்ஷக லங்கா' பாதுகாப்பு நிறுவனம் முன்னெடுத்து வந்த கடல்சார் பாதுகாப்பு சேவையில் எவன்கார்ட் (Avant-Garde) நிறுவனத்தைச் சேர்த்துக் கொண்டமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழு (கோப் குழு) தெரிவித்துள்ளது.
நாட்டிற்குள் கடத்தப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: சீனப் பிரஜைகள் இருவர் கைது!
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டது: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு!
நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த தியாகி திலீபனின் உருவச்சிலை, இன்று காலை பொலிஸாரால் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல இடங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




