
நெதர்லாந்து வேலைவாய்ப்பு மோசடி: இலங்கையர்களுக்குத் தூதரகம் எச்சரிக்கை. குறித்த பிரத்யேக ஒளிப்படம்
நெதர்லாந்தில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, இலங்கையர்களை இலக்கு வைத்து நடைபெறும் போலி வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து இலங்கையிலுள்ள நெதர்லாந்து தூதரகம் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத தரப்பினர் ஊடாக, அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளை வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி, விசா மற்றும் பயணச் செலவுகளுக்காக முற்பணம் பெற்று ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, வேலைவாய்ப்பு முகவர்களுக்கு எவ்விதப் பணத்தையும் செலுத்துவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு வேலைவாய்ப்பின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், இவ்வாறான மோசடிகளுக்கு உள்ளானவர்கள் உடனடியாக இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகள் ஊடாகச் சட்ட உதவியை நாடுமாறும் நெதர்லாந்து தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




