சுவிஸ்: 11°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

2026/2027 சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் புதிய அனுகூலங்கள்: அமைச்சரவை ஒப்புதல்!

VIGNESWARAN ABIRAMY•20 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
2026/2027 சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் புதிய அனுகூலங்கள்: அமைச்சரவை ஒப்புதல்!

2026/2027 சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் புதிய அனுகூலங்கள்: அமைச்சரவை ஒப்புதல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

2026/2027 ஆம் ஆண்டிற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள 'சுரக்ஷா' மாணவர் காப்புறுதித் திட்டத்தில் பல புதிய அனுகூலங்களை உள்ளடக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய, செவிப்புலன் கருவிகளைப் பழுதுபார்ப்பதற்காக 75,000 ரூபாய் வரையிலும், நாட்பட்ட நோய்களுக்காக நீண்டகாலமாக மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு 20,000 ரூபாய் வரையிலும் நன்மைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், தோற் புற்றுநோயைக் கண்டறிதல் உட்பட விசேட நோய் பரிசோதனைகளுக்காக 20,000 ரூபாய் வரை வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.  

மேலும், தீவிர நோய்கள் பிரிவின் கீழ் புற்றுநோய் சிகிச்சைகள், PET Scan பரிசோதனைகள் மற்றும் திடீர் விபத்துகளினால் ஏற்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான செலவுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. 

கல்விக் சுற்றுலாக்கள் மற்றும் விளையாட்டு விழாக்களின் போது ஏற்படும் விபத்துகளினால் மாணவர்கள் உயிரிழக்க நேரிட்டால் 100,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

வரும் 2026 செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் இத்திட்டத்தின் மூலம் அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் மற்றும் விசேட உதவிப் பாடசாலை மாணவர்கள் பலனடைவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

மாகாணசபைத் தேர்தல் முறை: நாடாளுமன்ற விசேட குழுவிடம் அரசியல் கட்சிகள் கருத்துச் சமர்ப்பிப்பு!

இலங்கை மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற விசேட குழு, பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொண்டது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிள்ளையான் உள்ளிட்ட மூவர் நவம்பர் 10 வரை விளக்கமறியலில்!

மட்டக்களப்பில் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உள்ளிட்ட மூவர் நவம்பர் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைப்பு!

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - விவாதத்துக்கு திகதி நிர்ணயம்!

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஹுங்கம மூவர் கொலை: பிரதான சந்தேகநபர் ‘அச்சினி’ டுபாயில் கைது!

ஹுங்கம பகுதியில் "கஜ்ஜா" என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் சுட்டுக் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான ‘அச்சினி’ என்ற அனோஷா லக்மாலி என்ற பெண் டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm