இலங்கையில் புதிய மாற்றம்: மின்சார வாகனங்களுக்குப் பச்சை நிற இலக்கத் தகடுகள் அறிமுகம்!

இலங்கையில் புதிய மாற்றம்: மின்சார வாகனங்களுக்குப் பச்சை நிற இலக்கத் தகடுகள் அறிமுகம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையில் உள்ள மின்சார வாகனங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், பச்சை நிறப் பின்னணியைக் கொண்ட புதிய இலக்கத் தகடுகளை (Green Number Plates) வழங்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் உள்ள மின்சார வாகனங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், பச்சை நிறப் பின்னணியைக் கொண்ட புதிய இலக்கத் தகடுகளை (Green Number Plates) வழங்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சு வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைய, நாட்டில் பயன்பாட்டில் உள்ள மற்றும் புதிதாகப் பதிவு செய்யப்படும் அனைத்து மின்சார மோட்டார் வாகனங்களுக்கும் இந்த பச்சை நிற இலக்கத் தகடுகள் வழங்கப்படவுள்ளன.
இதுவரை சுமார் 8,000 பச்சை நிற இலக்கத் தகடுகள் அச்சிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த புதிய பச்சை நிற இலக்கத் தகடுகள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் எனக் குறிப்பிட்ட ஆணையாளர் நாயகம், இது தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
செந்தில் குமார்
முதன்மை ஆசிரியர் (Chief Editor)கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
முகநூல் களியாட்ட விருந்துகளைக் கண்காணிக்க விசேட புலனாய்வு நடவடிக்கை: பொலிஸ் மாஅதிபர் அதிரடி உத்தரவு!
இலங்கையில் முகநூல் ஊடாக ஒழுங்கமைக்கப்படும் களியாட்ட விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இடங்களைக் கண்டறிந்து கண்காணிப்பதற்காக பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைய விசேட புலனாய்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
இலங்கையில் ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரிந்து விழும் அபாயகரமான நிலை!
சுகாதாரச் சேவையின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களின் வெற்றிடங்களின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டிற்குப் பின்னர் இதுவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முழுமையாகத் திருத்தப்படவில்லை என்பதால், ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரிந்து விழும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளதாக அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) கடுமையாக வலியுறுத்தியுள்ளது.
செஸ் வரிக்கு விடைகொடுக்கிறது இலங்கை: உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க அரசின் புதிய அதிரடி!
உள்நாட்டுத் தொழில்முனைவோரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ‘செஸ்’ வரியை முழுமையாக நீக்கிவிட்டு, புதிய சுங்கவரி முறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தான் கொள்கலன்களைக் கைப்பற்றிய சுங்கத்துறை!
பாகிஸ்தானில் இருந்து கடல் வழியே இரு கொள்கலன்களில் நுட்பமாக மறைத்து கொண்டுவரப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களைச் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




