சுவிஸ்: 21°C
•
இலங்கை: 29°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

புதிய கொள்கை வழிகாட்டல்களால் அச்சுறுத்தல்: கூரை மீது சூரிய மின் உற்பத்தித் துறை வீழ்ச்சியடையும் அபாயம் என எச்சரிக்கை!

செந்தில் குமார்•23 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
புதிய கொள்கை வழிகாட்டல்களால் அச்சுறுத்தல்: கூரை மீது சூரிய மின் உற்பத்தித் துறை வீழ்ச்சியடையும் அபாயம் என எச்சரிக்கை!

புதிய கொள்கை வழிகாட்டல்களால் அச்சுறுத்தல்: கூரை மீது சூரிய மின் உற்பத்தித் துறை வீழ்ச்சியடையும் அபாயம் என எச்சரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கையின் கூரை மீது சூரிய மின் உற்பத்தித் (Roof Top Solar) துறை எதிர்கொண்டுள்ள கடுமையான பாதிப்புகள் மற்றும் ஒழுங்குமுறைத் தடைகள் குறித்துச் சுட்டிக்காட்டி, இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இலங்கையின் கூரை மீது சூரிய மின் உற்பத்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்' எனும் தலைப்பில் அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், தேசிய மின்சக்தி பாதுகாப்பு மற்றும் நாட்டின் பொருளாதார மீட்சியைப் பாதிக்கும் இரு முக்கிய கொள்கை ரீதியான பிரச்சினைகளில் ஜனாதிபதி உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மற்றும் தேசிய அமைப்புகள் இயக்கி (NSO) ஆகிய உத்தியோகபூர்வ அமைப்புகளின் அறிக்கைகளை மேற்கோள்காட்டி, 2027 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நாட்டில் 450 MWh வரை கடுமையான மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்த வர்த்தக சம்மேளனம் எச்சரித்துள்ளது.

வரவிருக்கும் இந்த மின் நெருக்கடியைச் சமாளிப்பதற்கு, கூரை மீது சூரிய மின் உற்பத்தி கட்டமைப்புக்கள் மற்றும் மின்கல சேமிப்பு அமைப்புகளை (RTSPV) விரைவாக விரிவாக்கம் செய்வதே மிகவும் நடைமுறைச் சாத்தியமான ஒரே தீர்வாகும் என அக்கடிதத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், அண்மையில் வெளியிடப்பட்ட புதிய கொள்கை வழிகாட்டல்கள், தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு ஆதரவளிக்கக்கூடிய இத்துறையின் இருப்பிற்கே பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இயங்கி வரும் கூரை மீது சூரிய மின் உற்பத்தி மற்றும் மின்கல சேமிப்புத் துறையானது தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு 2,600 மெகாவாட் மின் கொள்ளளவை வழங்கி வருகிறது. அத்துடன், மின் உற்பத்திக்கு இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களுக்கான செலவில் மாதமொன்றுக்கு தோராயமாக 20.4 பில்லியன் ரூபாயை இந்தத் துறை நாட்டிற்குச் சேமித்து தருகிறது.

அவ்வாறு நாட்டின் பொருளாதாரத்திற்கும் மின் உற்பத்திக் கட்டமைப்புக்கும் பெரும் பங்களிப்பை வழங்கி வரும் இத்துறை, தற்போது பல ஒழுங்குமுறைத் தடைகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள தேசிய வர்த்தக சம்மேளனம், இத்துறையைப் பாதுகாத்துத் தேசிய மின் நெருக்கடியைத் தவிர்க்க ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
செந்தில் குமார்

செந்தில் குமார்

முதன்மை ஆசிரியர் (Chief Editor)

கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

எவன்கார்ட் விவகாரம்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் சி.ஐ.டி.யிடம் முறைப்பாடு செய்ய கோப் குழு தீர்மானம்!

இலங்கை கடற்படையுடன் இணைந்து 'ரக்னா அரக்ஷக லங்கா' பாதுகாப்பு நிறுவனம் முன்னெடுத்து வந்த கடல்சார் பாதுகாப்பு சேவையில் எவன்கார்ட் (Avant-Garde) நிறுவனத்தைச் சேர்த்துக் கொண்டமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழு (கோப் குழு) தெரிவித்துள்ளது.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாட்டிற்குள் கடத்தப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: சீனப் பிரஜைகள் இருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டது: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு!

நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த தியாகி திலீபனின் உருவச்சிலை, இன்று காலை பொலிஸாரால் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாட்டில் பல இடங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm