
மகாவலி ஆற்றுக்குக் குறுக்கே புதிய புகையிரதப் பாலம்: அமைச்சரவை அங்கீகாரம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
கண்டி மற்றும் பேராதனைப் பகுதிகளுக்கான புகையிரத வலையமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், சரசவி உயன மற்றும் பேராதனைக்கு இடையில் மகாவலி ஆற்றுக்குக் குறுக்காக புதிய புகையிரதப் பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கண்டி மாநகரப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு விரிவான நகரை அண்டிய புகையிரத வலையமைப்பை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின்கீழ் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கான சாத்தியவளக் கற்கை தற்போது இறுதித் கட்டத்தை எட்டியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், கடுகன்னாவ முதல் கம்பளை வரையான பிரதான புகையிரதப் பாதை மற்றும் பேராதனை முதல் கட்டுகஸ்தோட்டை வழியாக மாத்தளை வரையான பாதைகள் இரட்டைப் புகையிரதப் பாதைகளாக மாற்றப்படவுள்ளன. இதன்மூலம் தற்போது நிலவும் ஒற்றைப் பாதையினாலான தடைகள் நீக்கப்பட்டு, புகையிரதச் சேவையின் நம்பகத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இப்போச்சனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், டித்வா புயலால் சேதமடைந்த புகையிரத உட்கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்காக இந்தியாவின் கடன் உதவித் திட்டத்தின்கீழ் பெறப்படும் நிதியைக் கொண்டு இந்தப் புதிய புகையிரதப் பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




