சுவிஸ்: 18°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

நுவரெலியா - கிரகரி வாவியில் ஆபத்தான நீர் மாசுபாடு: சுற்றுலாப் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை!

செந்தில் குமார்•26 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
நுவரெலியா - கிரகரி வாவியில் ஆபத்தான நீர் மாசுபாடு: சுற்றுலாப் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை!

நுவரெலியா - கிரகரி வாவியில் ஆபத்தான நீர் மாசுபாடு: சுற்றுலாப் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியான நுவரெலியா கிரகரி வாவியின் நீரை நேரடியாக அருந்த வேண்டாம் என்றும், அவ்வாறு அருந்தினால் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியான நுவரெலியா கிரகரி வாவியின் நீரை நேரடியாக அருந்த வேண்டாம் என்றும், அவ்வாறு அருந்தினால் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.


நுவரெலியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிரகரி வாவிப் பகுதியில் நிலவும் நீர் மாசுபாடு தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபை கவலை வெளியி்ட்டுள்ளது.


நகரப் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் வாவியில் கலப்பதே இந்த நீர் மாசுபாட்டிற்கு முக்கியக் காரணம் எனக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


இதனால் வாவியில் உள்ள நீர் நச்சுத்தன்மை அடைந்துள்ளதாகவும், சுத்திகரிக்கப்படாமல் இந்நீரை நேரடியாக அருந்தினால் தீவிர சுகாதாரச் சிக்கல்கள் மற்றும் உயிராபத்து கூட ஏற்படலாம் என சுற்றாடல் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


எனவே, நுவரெலியாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் கிரகரி வாவியின் நீரை எந்தவொரு தேவைக்கும் நேரடியாக அருந்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர். 


மேலும், வாவியைச் சுத்திகரிப்பதற்கும் மாசடைவதைத் தடுப்பதற்கும் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சுற்றாடல் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
செந்தில் குமார்

செந்தில் குமார்

முதன்மை ஆசிரியர் (Chief Editor)

கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

எவன்கார்ட் விவகாரம்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் சி.ஐ.டி.யிடம் முறைப்பாடு செய்ய கோப் குழு தீர்மானம்!

இலங்கை கடற்படையுடன் இணைந்து 'ரக்னா அரக்ஷக லங்கா' பாதுகாப்பு நிறுவனம் முன்னெடுத்து வந்த கடல்சார் பாதுகாப்பு சேவையில் எவன்கார்ட் (Avant-Garde) நிறுவனத்தைச் சேர்த்துக் கொண்டமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழு (கோப் குழு) தெரிவித்துள்ளது.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாட்டிற்குள் கடத்தப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: சீனப் பிரஜைகள் இருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டது: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு!

நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த தியாகி திலீபனின் உருவச்சிலை, இன்று காலை பொலிஸாரால் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாட்டில் பல இடங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm