சட்ட மற்றும் நீதித்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த ரஷ்ய சட்டமா அதிபர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

சட்ட மற்றும் நீதித்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த ரஷ்ய சட்டமா அதிபர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இருதரப்பு சட்ட மற்றும் நீதித்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் சட்டமா அதிபர் அலெக்சாண்டர் குட்சன் (Alexander Gutsan) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
21 பேர் அடங்கிய உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவுடன் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது, இலங்கையின் சட்டமா அதிபர் மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உயர்மட்ட அதிகாரிகளுடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




