சுவிஸ்: 14°C
இலங்கை: 27°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் விவகாரம்: அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி மீண்டும் மனு!

செந்தில் குமார்8 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் விவகாரம்: அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி மீண்டும் மனு!

22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் விவகாரம்: அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி மீண்டும் மனு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கை அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமையினால் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமையினால் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் அழைப்பாளர் துலார குணதிலக்க மற்றும் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜயதிலக்க ஆகியோரால் உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

 

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி துலார குணதிலக்க என்ற மனுதாரரால் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

 

எனினும், அந்த மனு விசாரணைக்காகத் திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படவே இல்லை என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

இதன் மூலம் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

 

அத்துடன், இந்த மனுவை விசாரித்து இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலம் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தைச் சபாநாயகருக்கு அறிவிப்பதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் மேலும் கோரியுள்ளனர்.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
செந்தில் குமார்

செந்தில் குமார்

முதன்மை ஆசிரியர் (Chief Editor)

கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

முகநூல் களியாட்ட விருந்துகளைக் கண்காணிக்க விசேட புலனாய்வு நடவடிக்கை: பொலிஸ் மாஅதிபர் அதிரடி உத்தரவு!

இலங்கையில் முகநூல் ஊடாக ஒழுங்கமைக்கப்படும் களியாட்ட விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இடங்களைக் கண்டறிந்து கண்காணிப்பதற்காக பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைய விசேட புலனாய்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையில் ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரிந்து விழும் அபாயகரமான நிலை!

சுகாதாரச் சேவையின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களின் வெற்றிடங்களின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டிற்குப் பின்னர் இதுவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முழுமையாகத் திருத்தப்படவில்லை என்பதால், ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரிந்து விழும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளதாக அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) கடுமையாக வலியுறுத்தியுள்ளது.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

செஸ் வரிக்கு விடைகொடுக்கிறது இலங்கை: உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க அரசின் புதிய அதிரடி!

உள்நாட்டுத் தொழில்முனைவோரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ‘செஸ்’ வரியை முழுமையாக நீக்கிவிட்டு, புதிய சுங்கவரி முறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தான் கொள்கலன்களைக் கைப்பற்றிய சுங்கத்துறை!

பாகிஸ்தானில் இருந்து கடல் வழியே இரு கொள்கலன்களில் நுட்பமாக மறைத்து கொண்டுவரப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களைச் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.

11 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm