அலாஸ்கா இராணுவ ரேடார் தளத்தில் விமான விபத்து: 8 பேர் உயிரிழப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
மேற்கு அலாஸ்காவில் உள்ள தொலைதூர இராணுவ ரேடார் தளத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற விமான விபத்தில், பயணித்த 8 பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
அலாஸ்காவின் மிகப் பெரிய நகரமான ஏங்கரேஜிலிருந்து புறப்பட்ட இந்த விமானம், அங்கிருந்து மேற்கே சுமார் 725 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேப் நியூவென்ஹாம் லாங் ரேஞ்ச் ரேடார் தள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது.
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் அலாஸ்கா பிராந்திய தலைவர் க்ளிண்ட் ஜோன்சன், இந்த விபத்தின்போது விமானத்தில் ஆறு பயணிகளும் இரண்டு விமானிகளும் இருந்ததாகத் தெரிவித்தார்.
இந்த விமானம் ஏங்கரேஜை தளமாகக் கொண்டு இயங்கும் 'செக்யூரிட்டி ஏவியேஷன்' (Security Aviation) என்ற சாட்டர்ட் விமான நிறுவனத்தின் "Cessna 441" ரக விமானம் எனத் தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பில் அலாஸ்கா நாடாளுமன்ற உறுப்பினர் லிசா முர்கோவ்ஸ்கி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
குரு
செய்தியாளர்அக்கினி செய்திகளின் சிறப்பு கட்டுரையாளர். பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் உலக விவகாரங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு!
தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், உலகளவில் சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது.
திபெத்தில் சீனா கட்டும் மெகா அணை: இந்தியாவின் நீர் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!
திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டத் திட்டமிட்டுள்ள பிரமாண்ட நீர்மின் திட்ட அணையினால், இந்தியாவில் கடுமையான வெள்ள அபாயமும் வறட்சியும் ஏற்படக்கூடும் என்று சீன ஆராய்ச்சியாளர்களே எச்சரித்துள்ளனர்.
நேட்டோ பாதுகாப்புச் செலவு இலக்குகளை எட்டுவதற்கான திட்டத்தை வெளியிடுகிறது பிரித்தானியா!
நேட்டோ அமைப்பின் பாதுகாப்புச் செலவு இலக்குகளை எட்டுவதற்கான திட்டத்தை பிரித்தானிய அரசு வெளியிடவுள்ளது.
அமித் ஷா தொடர்பான அவதூறு வழக்கிலிருந்து ராகுல் காந்தி விடுதலை!
இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படும் 2018-ஆம் ஆண்டு வழக்கிலிருந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று (26) விடுதலை செய்யப்பட்டார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




