
அவுஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ண் மற்றும் விக்டோரியா மாநிலத்தின் புறநகர்ப் பகுதிகளில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி இன்று சனிக்கிழமை (03) அதிகாலை 2:01 மணிக்கு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெல்போர்ணின் கிழக்குப் பகுதியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையங்கொண்ட இந்த பூமியதிர்ச்சி 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Shake map தரவுகளின்படி, மெல்போர்ண் நகரத்தின் சில பகுதிகளில் இந்த பூமியதிர்ச்சி பரவலாக உணரப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் இப்பகுதியில் பதிவான மிகவும் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

YOGALINGAM DILAKSHIKA
செய்தியாளர்தொடர்புடைய செய்திகள் (Related News)
காங்கோவில் எபோலா தொற்று தீவிரம் – 5 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு; 2,320-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளது. இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,320-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஹாரா பாலைவனத்தில் 410 கோடி ஆண்டுகள் பழமையான செவ்வாய் கிரக விண்கல் கண்டுபிடிப்பு!
சஹாரா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட விண்கல் ஒன்று, சுமார் 410 கோடி ஆண்டுகள் பழமையான செவ்வாய் கிரகப் பாறை என நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
GPS-க்கு மாற்றாக இந்தியாவின் நாவிக் தொழில்நுட்பம் – இஸ்ரோவின் புதிய செயற்கைக்கோள் வெற்றி!
இந்தியாவின் சொந்த செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பான நாவிக் தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் வகையில், இஸ்ரோவின் GSLV-F18 ராக்கெட் மூலம் NVS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அவசரமில்லை – டிரம்ப்!
ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவுக்கு எந்த அவசரமும் இல்லை என்றும், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




