சுவிஸ்: 11°C
•
இலங்கை: 27°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ; 37 பேர் காயம்!

சுமி•23 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ஜப்பானில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ; 37 பேர் காயம்!

ஜப்பானில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ; 37 பேர் காயம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ஜப்பானின் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்ற சக்திவாய்ந்த பூமியதிர்ச்சியில் சுமார் 37 பேர் காயமடைந்துள்ளதுடன், போக்குவரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.


 

ஜப்பான் வானிலை மையத்தின் தகவல்படி, இந்த பூமியதிர்ச்சி 5.9 ரிச்டர் அளவாகப் பதிவாகியுள்ளதுடன், இதன் மையம் இபராக்கி மாகாணத்தின் தெற்குப் பகுதியில் 68 கிலோமீற்றர் ஆழத்தில் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனை 5.8 ரிச்டராகக் கணித்துள்ளது.

 

பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஜப்பானிய பூமியதிர்ச்சி தீவிர அளவுகோலில் இது Lower 5 ஆகப் பதிவாகியுள்ளது.

 

பூமியதிர்ச்சி அதிர்வால் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்த மக்கள் பயத்தில் ஓட முற்பட்டபோது விழுந்தும், கதவுகள் மற்றும் தளபாடங்களில் மோதியுமே பெரும்பாலோர் காயமடைந்துள்ளனர். யோகோஹாமாவில் 80 வயதுப் பெண் ஒருவர் படுக்கையிலிருந்து விழுந்து இடுப்பில் பலத்த காயமடைந்துள்ளார்.

 

டோக்கியோவின் கோட்டோ பகுதியில் நிலத்தடி நன்னீர் குழாய் ஒன்று உடைந்ததால் வீதிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. பின்னர் அது சரிசெய்யப்பட்டுள்ளது.

 

டோக்கியோவில் உள்ள சுமார் 460 வீடுகளில் தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
சுமி

சுமி

செய்தி ஆசிரியர்

அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

சேதமடைந்த அணு உலைகளைச் சீரமைக்காத ஈரான்! IAEA வெளியிட்ட முக்கிய தகவல்!

இராணுவத் தாக்குதல்களால் சேதமடைந்த தனது அணு உலைகளையோ அல்லது அணுசக்தி மையங்களையோ சீரமைப்பதற்கோ அல்லது மீண்டும் கட்டுவதற்கோ ஈரான் எந்தவித முயற்சியும் செய்யவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் கிராசி தெரிவித்துள்ளார்.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நெதன்யாகு ஆட்சியை வீழ்த்தத் திட்டம்! எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளிக்க அரபுக்கட்சிகள் தயார்!

இஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக எதிர்க்கணிகளுக்கு ஆதரவளிக்க அரபுப் பிராந்தியக் கட்சிகள் முன்வந்துள்ளன.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மத்திய கிழக்கில் மீண்டும் உச்சக்கட்டத் பதற்றம்: 96 மணிநேரக் கெடுவில் ஈரான் எல்லைப் பகுதிகள்!

ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான இராணுவத் தாக்குதலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளுடனும் அமெரிக்கப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பங்குச் சந்தையில் ஜியோவின் அதிரடி என்ட்ரி! ஒரே நாளில் ரூ. 12.50 லட்சம் கோடி சந்தை மதிப்பு!

முகேஷ் அம்பானியின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம், இந்தியப் பங்குச் சந்தையில் 21 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வுடன் நுழைந்து, நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மதிப்புமிக்க நிறுவனமாகப் பிரம்மாண்ட சாதனையைப் படைத்துள்ளது.

29 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm