பொதுமக்களுக்கு இடையூறின்றி நினைவுகூர உரிமை உண்டு: ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் கருத்து!

பொதுமக்களுக்கு இடையூறின்றி நினைவுகூர உரிமை உண்டு: ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் கருத்து! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்கள் மற்றும் அடையாளங்களைக் காட்சிப்படுத்தாமல், உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் உரிமை மக்களுக்கு உண்டு என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
யாழ்ப்பாணம், சாட்டி மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள காணி தமக்குச் சொந்தமானது எனக் கூறி, அங்கு மாவீரர் நாள் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கக் கோரி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய, வேலன் சுவாமி உள்ளிட்ட நால்வரின் பெயர்களைக் குறிப்பிட்டு, சாட்டியில் மாவீரர் நாள் நிகழ்விற்குத் தடை விதிக்கக் கோரி பொலிஸார் நீதிமன்றில் 'ஏ' அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உயிரிழந்தவர்களை நினைவுகூரும் உரிமை உள்ளதாகப் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளால் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும், தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்கள் மற்றும் அடையாளங்களைக் காட்சிப்படுத்தாமலும் உயிர்நீத்தவர்களை நினைவுகூர உரிமை உள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. அத்துடன், பொலிஸாரினால் 'ஏ' அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளமையால், காணி உரிமை தொடர்பில் எவ்வித கட்டளைகளையும் பிறப்பிக்க முடியாது எனவும் மன்று அறிவித்துள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




