பலாங்கொடையில் காணாமல் போன 3 பாடசாலை மாணவிகள் மீட்பு: திருகோணமலையில் பொலிஸார் கண்டுபிடிப்பு!

பலாங்கொடையில் காணாமல் போன 3 பாடசாலை மாணவிகள் மீட்பு: திருகோணமலையில் பொலிஸார் கண்டுபிடிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையின் பலாங்கொடை பகுதி காணமல் போன 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொடையிலுள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் இந்த மாணவிகள், திங்கட்கிழமை (31) மேலதிக வகுப்பிற்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனைத் தொடர்ந்து, பெற்றோரால் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் பின் , காணாமல்போன மூன்று மாணவிகளும் திருகோணமலையில் நலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கயல்
செய்தியாளர்அக்கினி செய்திகளின் சர்வதேச செய்தி நிருபர். ஐரோப்பிய நாடுகள் மற்றும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் நிகழ்வுகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
அனோஜனின் உயிரைப் பாதுகாக்க மிக அவதானமான நகர்வு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞனான சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மிக அவதானமாகவே முன்னெடுக்க வேண்டும். அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் தீவிர இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
விசா இல்லாத பயணத்துக்கு இலங்கை, தாய்லாந்து இணக்கம்!
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் பயணங்களை எளிதாக்கவும், சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
இலங்கையில் வறுமை இரட்டிப்பானதாக உலக வங்கி அறிவிப்பு!
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்தில் வறுமை நிலை இரட்டிப்பாக உயர்ந்ததாகவும், சுமார் 20 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




