ஈழத் தமிழர்களின் பன்னாட்டு நீதிக்கு சஜித் பிரேமதாச துணைநிற்க வேண்டும்: துரைராசா ரவிகரன் எம்.பி. வலியுறுத்தல்

ஈழத் தமிழர்களின் பன்னாட்டு நீதிக்கு சஜித் பிரேமதாச துணைநிற்க வேண்டும்: துரைராசா ரவிகரன் எம்.பி. வலியுறுத்தல் குறித்த பிரத்யேக ஒளிப்படம்
கவன்திஸ்ஸ யானையின் மரணத்திற்கான நீதியான விசாரணைக்கு வெளிநாட்டு நிபுணர்களின் உதவியை கோரும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச செம்மணி மனிதப்புதைகுழி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் முள்ளிவாய்க்கால் தமிழ்இனப்படுகொலை உள்ளிட்ட விவகாரங்களுக்கும் பன்னாட்டு நிபுணர்களின் தலையீட்டுக்காகவும் பன்னாட்டு நீதி விசாரணைக்காகவும் தமிழ் தரப்புடன் சேர்ந்து தமிழ் மக்களுக்காகத் துணைநிற்கவேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு யானை மனிதமோதலால் ஆண்டொன்றுக்கு சராசரியாக முந்நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளும் நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களும் உயிரிழப்பது மனிதம் சார்ந்த சூழலியல் பேரிடர் எனச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அதிகரித்துள்ள யானை மனிதமோதலைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
மாகாணசபைத் தேர்தல் முறை: நாடாளுமன்ற விசேட குழுவிடம் அரசியல் கட்சிகள் கருத்துச் சமர்ப்பிப்பு!
இலங்கை மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற விசேட குழு, பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொண்டது.
பிள்ளையான் உள்ளிட்ட மூவர் நவம்பர் 10 வரை விளக்கமறியலில்!
மட்டக்களப்பில் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உள்ளிட்ட மூவர் நவம்பர் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைப்பு!
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - விவாதத்துக்கு திகதி நிர்ணயம்!
சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.
ஹுங்கம மூவர் கொலை: பிரதான சந்தேகநபர் ‘அச்சினி’ டுபாயில் கைது!
ஹுங்கம பகுதியில் "கஜ்ஜா" என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் சுட்டுக் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான ‘அச்சினி’ என்ற அனோஷா லக்மாலி என்ற பெண் டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




