சுவிஸ்: 16°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

VIGNESWARAN ABIRAMY•13 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ஷிரந்தி ராஜபக்‌ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் விளக்கமறியல் நீடிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

'சிரிலிய சவிய' நிதி மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்‌ஷவை, எதிர்வரும் அக்டோபர் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமகம முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாட்டப்பட் விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு முன்வைத்த சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதவான், சந்தேகநபரின் மேலதிக மருத்துவ அறிக்கைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பணித்தார்.

மேலும், அன்றைய தினம் வரை பிணை கோரிக்கை தொடர்பான கட்டளையைப் பிறப்பிக்க முடியாது என்றும் நீதவான் இதன்போது சுட்டிக்காட்டினார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

A-9 வீதி மேம்பாட்டிற்கான ரூ. 1 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!

கண்டி – யாழ்ப்பாணம் A9 வீதியின் ஒரு பகுதியை அகலப்படுத்தி மேம்படுத்துவதற்காக, 1.07 பில்லியன் ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை ‘டுடாவே பிரதர்ஸ் (பிரைவேட்) லிமிடெட்’ (Tudawe Brothers (Pvt.) Ltd.) நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

13 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

2027 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.7% ஆக குறையும்: IMF புதிய கணிப்பு!

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 2027 ஆம் ஆண்டில் 3.7 சதவீதம் வரை மட்டுமே அடையும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது அண்மைய 'உலக பொருளாதார தொலைநோக்கு' அறிக்கையில் கணித்துள்ளது.

13 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட மூவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

எரிபொருள் விலை உயர்வின் சுமையை மக்கள் மீது சுமத்த மாட்டோம்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

மத்திய கிழக்கின் போர்ப் பதற்றங்களால் எரிபொருள் விலை உலகளவில் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், அதன் முழுச் சுமையையும் மக்கள் மீது சுமத்தாமல் நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

13 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm