சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

சிவராசா அனோஜனின் விடுதலைக்காகத் தலையிட்ட ஜனாதிபதிக்கு அவரது குடும்பத்தினர் நன்றி!

VIGNESWARAN ABIRAMY•12 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சிவராசா அனோஜனின் விடுதலைக்காகத் தலையிட்ட ஜனாதிபதிக்கு அவரது குடும்பத்தினர் நன்றி!

சிவராசா அனோஜனின் விடுதலைக்காகத் தலையிட்ட ஜனாதிபதிக்கு அவரது குடும்பத்தினர் நன்றி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட சிவராசா அனோஜனின் குடும்பத்தினர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, இலங்கை மக்களுக்காக எத்தகைய சந்தர்ப்பத்திலும் குரல் கொடுப்பது தமது பொறுப்பு என ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன், அனோஜனை விடுதலை செய்த சவூதி அரேபிய அரசுக்கும், இதற்காகச் சாதி, மத, கட்சி பேதமின்றித் தலையீடு செய்த அனைவருக்கும் விசேட நன்றி உரித்தாக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சிவராசா அனோஜன் தற்போது சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவித்த அவரது தாயார், தமது மகனின் விடுதலைக்காக ஆரம்பம் முதல் தலையீடு செய்த ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந்த் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm