சுவிஸ்: 11°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப சிறப்பு வசதி: அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு!

கயல்•26 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப சிறப்பு வசதி: அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு!

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப சிறப்பு வசதி: அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கையர்கள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள் மற்றும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன என்று நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.


 

யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்கள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியபோது வழங்கப்பட்டிருந்த சில விதிவிலக்குகள்,அண்மையில் பலாலி விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய சிலருக்கு வழங்கப்படாததன் காரணமாக கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றது.

 

இதனைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் முக்கிய தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டது.அதன்படி உயிரைப் பாதுகாப்பதற்காக முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கைப் பிரஜைகள் அனைவரும் தற்போது நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் அச்சமின்றித் தாயகம் திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
கயல்

கயல்

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் சர்வதேச செய்தி நிருபர். ஐரோப்பிய நாடுகள் மற்றும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் நிகழ்வுகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

மாகாணசபைத் தேர்தல் முறை: நாடாளுமன்ற விசேட குழுவிடம் அரசியல் கட்சிகள் கருத்துச் சமர்ப்பிப்பு!

இலங்கை மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற விசேட குழு, பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொண்டது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிள்ளையான் உள்ளிட்ட மூவர் நவம்பர் 10 வரை விளக்கமறியலில்!

மட்டக்களப்பில் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உள்ளிட்ட மூவர் நவம்பர் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைப்பு!

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - விவாதத்துக்கு திகதி நிர்ணயம்!

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஹுங்கம மூவர் கொலை: பிரதான சந்தேகநபர் ‘அச்சினி’ டுபாயில் கைது!

ஹுங்கம பகுதியில் "கஜ்ஜா" என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் சுட்டுக் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான ‘அச்சினி’ என்ற அனோஷா லக்மாலி என்ற பெண் டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm