அஸர்பைஜானில் FIFA15இன் கீழ் உலகக் கிண்ண இலங்கை அணியை சந்தித்து பாராட்டிய விளையாட்டுத்துறை அமைச்சர்

அஸர்பைஜானில் FIFA15இன் கீழ் உலகக் கிண்ண இலங்கை அணியை சந்தித்து பாராட்டிய விளையாட்டுத்துறை அமைச்சர் குறித்த பிரத்யேக ஒளிப்படம்
அஸர்பைஜானில் நடைபெற்றுவரும் பீபா (FIFA) 15 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் மற்றும் திருவிழாவில் பங்குபற்றிவரும் இலங்கை இளையோர் அணியினரை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் ஆகியோர் நேரடியாக சந்தித்து தங்களது பாராட்டுதல்களைத் தெரிவித்தனர்.
இந்த சுற்றுப் போட்டியில் 7 ஆட்டங்களில் விளையாடிய இலங்கை, அமெரிக்க அணிகளில் ஓன்றான வேர்ஜின் தீவுகள் அணியை AB குழுவுக்கான லீக் சுற்றில் 3 - 0 என வெற்றிகொண்டு வரலாறு படைத்திருந்தது.
இந் நிலையில் 15 வயதுக்குட்பட்ட இலங்கை அணியினரை சந்தித்த அமைச்சரும் சம்மேள னத் தலைவரும் அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவித்ததுடன் அவர்களது முயற்சியை பாராட்டினர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
ஹெட்ரிக் கோலுடன் 985 கோல்களை பதிவு செய்து சாதனை படைத்தார் ரொனால்டோ
சவூதிபுரோ லீக் போட்டிகள் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவருகிறது. தனது 1000வது கோலினை குறிவைத்து கிறிஸ்டியானோ ரோனால்டோவும் ஆக்ரோஸமாக கோல்களை பதிவு செய்து வருகிறார்.
இங்கிலாந்திடம் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது இலங்கை!
லாகூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு இமாலயச் சுவரான 386 ஓட்டங்களைக் குவித்தது! அந்த அணியில் பென் டக்கெட் அபாரமாக ஆடி 167 ஓட்டங்களையும், டொம் பான்டன் 74 ஓட்டங்களையும் விளாசினர். இலங்கை தரப்பில் அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
28 வயதில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்!-
அயர்லாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பென் வைட் , தனது 28 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கைக்கு 387 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இலங்கையணி வெற்றி பெறுவதற்கு 387 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




