சுவிஸ்: 13°C
•
இலங்கை: 31°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

இந்தியாவின் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி கட்டுப்பாட்டை சமாளிக்க இலங்கை தயார்: வர்த்தக பிரதியமைச்சர் தகவல்!

ஆகாஷ்•27 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இந்தியாவின் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி கட்டுப்பாட்டை சமாளிக்க இலங்கை தயார்: வர்த்தக பிரதியமைச்சர் தகவல்!

இந்தியாவின் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி கட்டுப்பாட்டை சமாளிக்க இலங்கை தயார்: வர்த்தக பிரதியமைச்சர் தகவல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

எதிர்பார்க்கப்படும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக இந்தியா அத்தியாவசிய உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தினால் அல்லது இடைநிறுத்தினால் அதனை எதிர்கொள்வதற்கான அவசர நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


 

இலங்கை தனது பல உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு இந்தியாவையே பெரிதும் நம்பியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், எல் நினோ இந்தியாவின் விவசாய மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளைப் பாதித்து, இலங்கையானது பொருட்களைப் பெறுவதில் தடங்கல்களை ஏற்படுத்தினால் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அண்மைய கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்தவொரு குறிப்பிட்ட இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், எனினும் இது தொடர்பில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டுத் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
ஆகாஷ்

ஆகாஷ்

முதன்மை ஆசிரியர்

அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கையில் வறுமை இரட்டிப்பானதாக உலக வங்கி அறிவிப்பு!

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்தில் வறுமை நிலை இரட்டிப்பாக உயர்ந்ததாகவும், சுமார் 20 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பைத் தடுக்கும் சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளவுள்ள மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணை: கருணா அம்மானிடம் சிஐடி வாக்குமூலம்!

கடத்தல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் திங்கட்கிழமை (5) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm