பொருளாதார மீட்சியில் இலங்கை: 4.2% வளர்ச்சி பெறுகிறது பொருளாதாரம் – நாணய நிதியத்துடன் முக்கிய உடன்பாடு!

பொருளாதார மீட்சியில் இலங்கை: 4.2% வளர்ச்சி பெறுகிறது பொருளாதாரம் – நாணய நிதியத்துடன் முக்கிய உடன்பாடு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ், இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான 7ஆவது மதிப்பாய்வை நிறைவுசெய்வதற்காக, நாணய நிதியத்தின் பணியாளர் குழுவிற்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த உடன்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இறுதி ஒப்புதல் அளித்த பின்னர், இலங்கைக்கு சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெறும்.
இதன் மூலம் இந்த திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைத்த மொத்த நிதியுதவி சுமார் 2.7 பில்லியன் டொலர்களாக உயர்வடையும்.இருப்பினும், நிறைவேற்று சபையின் ஒப்புதலுக்கு முன்னர், 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் மற்றும் நிதி உத்தரவாத மதிப்பாய்வை பூர்த்தி செய்தல் ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
பொருளாதார அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் இலங்கை கணிசமான மீள்தன்மையைக் காட்டியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நாணய நிதியம், 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீத வளர்ச்சியடைந்துள்ளதாகவும், ஓகஸ்ட் மாத முடிவில் வெளிநாட்டு கையிருப்பு 6.9 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதேவேளை, மத்திய கிழக்கு மோதல்கள், உலகளாவிய வர்த்தக மாற்றங்கள் மற்றும் காலநிலைத் தாக்கங்கள் காரணமாக ஆபத்துகள் தொடர்வதால், எரிபொருள் விலைச் சீரமைப்பு, ஏழைகளுக்கான நிவாரணங்கள் மற்றும் ஊழல் எதிர்ப்புச் சட்டங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல முக்கிய பரிந்துரைகளையும் நாணய நிதியம் முன்வைத்துள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கையில் டெங்கு உயிரிழப்புகள் 78 ஆக உயர்வு!
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கும் விசித்திர வைரஸ்!
மாத்தறை - ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களிடையே வைரஸ் காய்ச்சல் ஒன்று அதிவேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, அங்குப் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.
கைதாகாமல் இருக்க முன் பிணை மனுத் தாக்கல் செய்த ஷிராந்தி ராஜபக்ச!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியும், முன்னாள் முதன்மைப் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ச, தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றத்தில் முன் பிணை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
ஞானசார தேரருக்கு எதிரான சிறைத் தண்டனையை அமல்படுத்த அறிவுறுத்தல்!
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் தம்பற அமுதே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட எஞ்சிய சிறைத் தண்டனைக் காலத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




