சுவிஸ்: 6°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

மெல்போர்னில் சிறுமிகளைத் துஷ்பிரயோகம் செய்த இலங்கை பிக்குவுக்கு 13 ஆண்டுகள் சிறை!

VIGNESWARAN ABIRAMY•8 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
மெல்போர்னில் சிறுமிகளைத் துஷ்பிரயோகம் செய்த இலங்கை பிக்குவுக்கு 13 ஆண்டுகள் சிறை!

மெல்போர்னில் சிறுமிகளைத் துஷ்பிரயோகம் செய்த இலங்கை பிக்குவுக்கு 13 ஆண்டுகள் சிறை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பௌத்த விகாரையில் 6 சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில், இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பௌத்த பிக்குவுக்கு 13 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன் தம்ம சரண விகாரையின் பிரதம பிக்குவாகப் பணியாற்றிய 71 வயதுடைய நாவொதுன்னே விஜித தேரர், கடந்த 1994 முதல் 2002 வரை விகாரைக்கு வந்த சிறுமிகளைத் தனது தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறை மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்.

பெற்றோர் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

விக்டோரியா மாநில கவுண்டி நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தண்டனையின்படி, அவர் குறைந்தபட்சம் 9 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும். தண்டனைக்குப் பின் அவர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத குருமார்களின் பெயரால் குழந்தைகளிடம் இழைக்கப்பட்ட இந்தச் கோரச் செயல் அவுஸ்திரேலியவாழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஜெர்மனியில் இன்று பிரமாண்ட போராட்டம்: 1.6 லட்சத்திற்கும் அதிகமானோர் வீதிகளில் இறங்க ஏற்பாட்டாளர்கள் திட்டம்!

ஜெர்மனி முழுவதும் சனிக்கிழமையன்று (இன்று) நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்களில் 1,60,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சவூதி அரேபியா மீது மீண்டும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள், இராணுவ தளம் உள்ளிட்ட பல இடங்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (30) மீண்டும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக சவூதி தெரிவித்துள்ளது.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கேள்வி கேட்ட பத்திரிகையாளரை உருவ கேலி செய்த டிரம்ப்!

செய்தியாளர் சந்திப்பில் தனியுரிமை தொடர்பான கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளர் ஒருவரை, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உருவ கேலி (Body Shaming) செய்து பேசிய சம்பவம் ஊடக உலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பலத்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இராணுவ பலத்தை உயர்த்தும் வடகொரியா: ஏ.ஐ ட்ரோன்களை உருவாக்கத் தலைவர் கிம் உத்தரவு!

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா பெற்றுக்கொண்ட அனுபவங்கள் மற்றும் பாடங்களை அடிப்படையாகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் இயங்கும் நவீன ஆளில்லா விமானங்களை வடகொரியா தீவிரமாக உருவாக்கி வருகிறது.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm