சுவிஸ்: 12°C
•
இலங்கை: 28°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
தமிழ்நாடு

'துளி' இலச்சினையை வெளியிட்டு 'மழைநீர் சேமிப்பு மாதிரி இல்லத்தை' திறந்து வைத்தார் முதலமைச்சர்!

VIGNESWARAN ABIRAMY•21 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
'துளி' இலச்சினையை வெளியிட்டு 'மழைநீர் சேமிப்பு மாதிரி இல்லத்தை' திறந்து வைத்தார் முதலமைச்சர்!

'துளி' இலச்சினையை வெளியிட்டு 'மழைநீர் சேமிப்பு மாதிரி இல்லத்தை' திறந்து வைத்தார் முதலமைச்சர்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

எதிர்கால தலைமுறையினரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் முக்கியப் பகுதியாக, நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட 'மழைநீர் சேமிப்பு மாதிரி இல்லத்தை' தமிழக முதலமைச்சர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

பொதுமக்களுக்கு மழைநீர் சேமிப்பின் அவசியத்தை எளிய முறையில் விளக்கும் வகையில் இந்த மாதிரி இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு இயக்கத்திற்கான சிறப்பு 'துளி' இலச்சினையை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர்:

"ஒவ்வொரு சொட்டு மழைநீரும் நமது எதிர்காலத்தின் சேமிப்பு. வீடுகள் தோறும் மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகளை முறையாகப் பராமரித்து, நிலத்தடி நீர்மட்டத்தைப் உயர்த்த பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார்.

மாதிரி இல்லத்தின் சிறப்பம்சங்கள்:

கூரை மழைநீர் சேகரிப்பு: 

மழைக் காலத்தில் கூரையில் விழும் நீரை வீணாக்காமல் சேமிக்கும் நவீன வடிகட்டி அமைப்புகள்.

நிலத்தடி நீர் மறுஊட்டம்:

 மேலதிக நீரை நேரடியாக நிலத்தடி நீர்மட்டத்திற்குக் கொண்டு செல்லும் 'ரீசார்ஜ் கிணறுகள்' 

குறைந்த செலவில் வடிவமைப்பு: 

சிறிய வீடுகள் முதல் பெரிய வளாகங்கள் வரை எளிதில் அமைக்கும் வகையிலான மாதிரி வடிவங்கள்.

இந்நிகழ்வில் அரசு உயர் அதிகாரிகள், துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

எயார்பஸ் ஊழல் வழக்கு: நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்!

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஊழல் வழக்கு விசாரணைக்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மிகத் தீவிர புயலாக வலுவடையும் ‘அர்னாப்’; தமிழகத்துக்கு எச்சரிக்கை!

வங்கக் கடலில் ‘அர்னாப்’ (Arnab) புயல் ஒன்று உருவாகியுள்ளது.இந்தப் புயல் இன்று (26) நள்ளிரவுக்குள் தீவிர புயலாகவும், நாளைய (27) தினத்துக்குள் மிகத் தீவிர புயலாகவும் வலுவடையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் (IMD) எதிர்வு கூறியுள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

தனியார் பள்ளிகள் அனுமதி விவகாரத்தில் அதிரடி திருப்பம்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது!

தனியார் பள்ளிகளுக்கான அரசு அங்கீகாரம் வழங்குவதில் நூறு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஜெம் வீரமணி மீது 8-வது வழக்குப்பதிவு – 5 பேருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து அதிரடி!

தமிழகத்தையே உலுக்கியுள்ள தொழில் அதிபர் ஜெம் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், தற்போது 8-ஆவது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய 5 நபர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாதவாறு சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm