கண்டி இராச்சியத்தின் பழமையான துப்பாக்கிகளை மீண்டும் இலங்கையிடம் கையளிக்க நெதர்லாந்து தீர்மானம்!

கண்டி இராச்சியத்தின் பழமையான துப்பாக்கிகளை மீண்டும் இலங்கையிடம் கையளிக்க நெதர்லாந்து தீர்மானம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கண்டி இராச்சியத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இலங்கைக்கு உரித்தான இரண்டு பழமையான துப்பாக்கிகளை மீண்டும் இலங்கையிடம் கையளிக்க நெதர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
1765 ஆம் ஆண்டில் ஒல்லாந்தப் படையினரால் கண்டி இராச்சியம் தாக்கப்பட்டபோது அங்கிருந்து கொள்ளையிடப்பட்டதாகக் கருதப்படும் இந்தத் துப்பாக்கிகள், தற்போது ஆம்ஸ்டர்டாமிலுள்ள 'ரிக்ஸ்' அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய 'மகா துவக்கு' என அழைக்கப்படும் இவற்றில் ஒரு துப்பாக்கியில் கண்டி மன்னருடன் தொடர்புடைய அடையாளங்கள் பொறிக்கப்பட்டுள்ளமை ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் நெதர்லாந்து நிபுணர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் பரிந்துரைக்கமைய, நெதர்லாந்து கலாசார அமைச்சர் ரியான் லெட்செர்ட் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
காலனித்துவ காலத்தில் இழக்கப்பட்ட கலாசாரப் பொருட்களை மீளக் கையளிப்பதன் மூலம் வரலாற்று அநீதிகளைச் சரிசெய்ய முடியும் என நெதர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும், இவற்றை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




