
வடக்கின் சிறந்த பிரதேச செயலகங்களுக்குச் சபாநாயகர் விருது வழங்கி வைப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
2025 ஆம் ஆண்டில் சிறந்த முறையில் பணியாற்றிய வட மாகாணப் பிரதேச செயலகங்களை மதிப்பீடு செய்து கௌரவிக்கும் விசேட நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
பொதுமக்களுக்கு மிகவும் திறமையாகவும் விரைவாகவும் சேவைகளை வழங்கும் நோக்கில், ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளைப் பிரதேச செயலக மட்டம் வரை பரவலாக்கும் வேலைத்திட்டத்தின் கீழேயே இந்த மதிப்பீடுகள் முன்னெடுக்கப்பட்டன.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகங்கள் இதில் உள்ளடக்கப்பட்டன. ஜனாதிபதி நிதியத்தின் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்வது மற்றும் அவற்றுக்கு விரைவாகப் பதிலளிக்கும் திறன் ஆகியவற்றுக்கு அமைவாக, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 3 பிரதேச செயலகங்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தம் 15 பிரதேச செயலகங்கள் கௌரவிக்கப்பட்டன.
மாவட்ட ரீதியில் முதன்மை பெற்ற பிரதேச செயலகங்கள்:
யாழ் மாவட்டம்: நல்லூர் பிரதேச செயலகம் (முதலாம் இடம்), சாவகச்சேரி பிரதேச செயலகம் (இரண்டாம் இடம்), வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகம் (மூன்றாம் இடம்).
கிளிநொச்சி மாவட்டம்: கிளிநொச்சி பிரதேச செயலகம் (முதலாம் இடம்), பூநகரி பிரதேச செயலகம் (இரண்டாம் இடம்), பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் (மூன்றாம் இடம்).
மன்னார் மாவட்டம்: நானாட்டான் பிரதேச செயலகம் (முதலாம் இடம்), மன்னார் பிரதேச செயலகம் (இரண்டாம் இடம்), மாந்தை மேற்கு பிரதேச செயலகம் (மூன்றாம் இடம்).
முல்லைத்தீவு மாவட்டம்: கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் (முதலாம் இடம்), ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் (இரண்டாம் இடம்), மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் (மூன்றாம் இடம்).
வவுனியா மாவட்டம்: வவுனியா பிரதேச செயலகம் (முதலாம் இடம்), வவுனியா வடக்கு பிரதேச செயலகம் (இரண்டாம் இடம்), வெண்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலகம் (மூன்றாம் இடம்).
இந்நிகழ்வில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்லத்தம்பி திலகநாதன், எம். ஜெகதீஸ்வரன் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே, மாவட்ட செயலாளர்கள் உட்படப் பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
அனோஜனின் உயிரைப் பாதுகாக்க மிக அவதானமான நகர்வு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞனான சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மிக அவதானமாகவே முன்னெடுக்க வேண்டும். அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் தீவிர இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
விசா இல்லாத பயணத்துக்கு இலங்கை, தாய்லாந்து இணக்கம்!
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் பயணங்களை எளிதாக்கவும், சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
இலங்கையில் வறுமை இரட்டிப்பானதாக உலக வங்கி அறிவிப்பு!
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்தில் வறுமை நிலை இரட்டிப்பாக உயர்ந்ததாகவும், சுமார் 20 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




