
இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 20% ஆக குறைவு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களும் மொத்த நீர்க்கொள்ளவாக 20 வீதத்தில் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் கைலாயபிள்ளை பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களும் மொத்த நீர்க்கொள்ளவாக 20 வீதத்தில் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் கைலாயபிள்ளை பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
36அடி நீர்கொள்ளவைக்கொண்ட இரணைமடுக்குளத்தின் நீர் மட்டமானது தற்போது 19அடியாக காணப்படுகின்றது. ஏனைய குளங்களின் நீர்மட்டங்களும் குறைவடைந்து காணப்படுகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல குளங்கள் தற்பொழுது ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக சிறிய குளங்களில் நீர் முற்று முழுதாக வற்றிய நிலையில் காணப்படுவதன் காரணமாக கால்நடைகள் நீரின்றி அல்லலுறும் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குரு
செய்தியாளர்அக்கினி செய்திகளின் சிறப்பு கட்டுரையாளர். பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் உலக விவகாரங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
மாகாணசபைத் தேர்தல் முறை: நாடாளுமன்ற விசேட குழுவிடம் அரசியல் கட்சிகள் கருத்துச் சமர்ப்பிப்பு!
இலங்கை மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற விசேட குழு, பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொண்டது.
பிள்ளையான் உள்ளிட்ட மூவர் நவம்பர் 10 வரை விளக்கமறியலில்!
மட்டக்களப்பில் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உள்ளிட்ட மூவர் நவம்பர் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைப்பு!
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - விவாதத்துக்கு திகதி நிர்ணயம்!
சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.
ஹுங்கம மூவர் கொலை: பிரதான சந்தேகநபர் ‘அச்சினி’ டுபாயில் கைது!
ஹுங்கம பகுதியில் "கஜ்ஜா" என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் சுட்டுக் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான ‘அச்சினி’ என்ற அனோஷா லக்மாலி என்ற பெண் டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




