சுவிஸ்: 15°C
•
இலங்கை: 27°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

இலங்கையில் வறுமை இரட்டிப்பானதாக உலக வங்கி அறிவிப்பு!

VIGNESWARAN ABIRAMY•6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இலங்கையில் வறுமை இரட்டிப்பானதாக உலக வங்கி அறிவிப்பு!

இலங்கையில் வறுமை இரட்டிப்பானதாக உலக வங்கி அறிவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்தில் வறுமை நிலை இரட்டிப்பாக உயர்ந்ததாகவும், சுமார் 20 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

வறுமை தொடர்பான முந்தைய மதிப்பீடுகளை உலக வங்கி புதிய முறையைப் பயன்படுத்தி திருத்தியுள்ளது. 2020 முதல் 2024-ம் ஆண்டு வரையிலான குடும்ப அளவிலான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் தற்போது நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியிருந்தாலும், மக்களின் வருமானம், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் முழுமையாக சரியாகவில்லை என்று உலக வங்கி கூறியுள்ளது.

2025-ல் இலங்கையின் வறுமை விகிதம் 16.9 சதவீதமாக இருந்ததாகவும், இது நெருக்கடிக்கு முந்தைய காலத்தை விட தொடர்ந்து அதிகமாக இருப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பைத் தடுக்கும் சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளவுள்ள மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணை: கருணா அம்மானிடம் சிஐடி வாக்குமூலம்!

கடத்தல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் திங்கட்கிழமை (5) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

வாகன ஓட்டிகளுக்கு அறிவிப்பு: சங்குப்பிட்டி பாலத்தில் 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்!

ஏ-32 பூநகரி - யாழ்ப்பாணம் வீதியில் அமைந்துள்ள முக்கிய இணைப்புப் பாலமான சங்குப்பிட்டி பாலத்தில் அவசர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், அடுத்த 5 நாட்களுக்குப் போக்குவரத்து முழுமையாகத் தடை செய்யப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm