அபாயக் கட்டத்தில் இளைய தலைமுறை! 20 - 24 வயதினரிடையே வேகமாகப் பரவும் HIV தொற்று!

அபாயக் கட்டத்தில் இளைய தலைமுறை! 20 - 24 வயதினரிடையே வேகமாகப் பரவும் HIV தொற்று! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
நாட்டில் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளையோர் மத்தியில் எச்.ஐ.வி. தொற்றாளர்கள் பதிவாவது அதிகரித்துள்ளதாகத் தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டு நிறைவடையும் போது, 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிவின் கீழ் 88 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 78 பேர் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் மாதவி குணரத்ன, இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் மாத்திரம் மொத்தமாக 708 புதிய எச்.ஐ.வி. நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
1987 ஆம் ஆண்டு நாட்டில் முதலாவது எச்.ஐ.வி. நோயாளர் அடையாளம் காணப்பட்டதிலிருந்து, 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு முடிவடையும் வரை மொத்தமாக 8,111 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




