சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

சைபர் தாக்குதல் மற்றும் போலி கணக்குகள் அச்சுறுத்தல்: அவசர ஆலோசனையில் இலங்கை வங்கி உயர் அதிகாரிகள்!

VIGNESWARAN ABIRAMY•15 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சைபர் தாக்குதல் மற்றும் போலி கணக்குகள் அச்சுறுத்தல்: அவசர ஆலோசனையில் இலங்கை வங்கி உயர் அதிகாரிகள்!

சைபர் தாக்குதல் மற்றும் போலி கணக்குகள் அச்சுறுத்தல்: அவசர ஆலோசனையில் இலங்கை வங்கி உயர் அதிகாரிகள்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கையின் வங்கித் துறையை இலக்கு வைத்து, சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் நிதி மோசடிக் குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் வங்கித் துறைத் தலைவர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையின் வங்கித் துறையை இலக்கு வைத்து, சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் நிதி மோசடிக் குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் வங்கித் துறைத் தலைவர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


பொதுமக்களின் வங்கி கணக்குகளை வாடகைக்கு அல்லது விலைக்கு வாங்கி , அதன் மூலம் சட்டவிரோதமான மற்றும் சர்வதேச நிதிக் குற்றங்களுக்கான பணப் பரிவர்த்தனைகளைச் செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல கோடிக்கணக்கான பணம் கைமாறியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


வங்கி கணக்குகள் துஷ்பிரயோகம்: இலகுவாக வருமானம் ஈட்டித் தருவதாகக் கூறி சாமானிய மக்களிடம் பெறப்படும் வங்கி கணக்குகள், சர்வதேசக் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.  


இத்தகைய மோசடிகளில் அறியாமல் சிக்கும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எச்சரித்துள்ளது.  


சைபர் ஊடுருவல்கள், இ-மெயில் மோசடிகள் மற்றும் 'மியூல் கணக்குகள்' மூலமாக நாட்டின் நிதிப் பாதுகாப்புக்கும் வங்கியியல் கட்டமைப்புக்கும் பெரும் ஆபத்து உருவாகியுள்ளதால் வங்கி உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 


வங்கிக் கணக்குகளின் விபரங்களை முன்பின் தெரியாத நபர்களிடம் பகிர்வதைத் தவிர்க்குமாறும், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்து உடனடியாக வங்கிகளுக்குத் தெரிவிக்குமாறும் மத்திய வங்கி மற்றும் காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm