மத்திய ஆபிரிக்காவில் சோகம்: தங்கச் சுரங்கம் சரிந்து விழுந்து 30 தொழிலாளர்கள் பலி!

மத்திய ஆபிரிக்காவில் சோகம்: தங்கச் சுரங்கம் சரிந்து விழுந்து 30 தொழிலாளர்கள் பலி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
மத்திய ஆபிரிக்காவில் உள்ள தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் சுரங்கப் பணியாளர்கள் 30 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மத்திய ஆபிரிக்காவில் நானா மாம்பேரே மாகாணத்தில் உள்ள அப்பா பிராந்தியத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தினுள் செவ்வாய்க்கிழமை (18) காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென சுரங்கம் இடிந்து வீழ்ந்துள்ளது.
இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி ஸ்தலத்திலேயே 30 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும் பலர் காயமடைந்துள்ள நிலையில், மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதேவேளை இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கக்கூடும் என்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பற்ற முறையில் தொழில்நுட்ப வசதிகளை சரிவர பயன்படுத்தாமல் தங்கம் வெட்டியெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டமையே விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
கயல்
செய்தியாளர்அக்கினி செய்திகளின் சர்வதேச செய்தி நிருபர். ஐரோப்பிய நாடுகள் மற்றும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் நிகழ்வுகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
கனடா இராணுவத்தில் புதிய F-35 போர் விமானங்கள் இணைப்பு
அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன F-35 ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஆலோசனைகளில் கனட அரசாங்கம் ஈடுபட்டு வரும் நிலையில், முதற்கட்டமாக இரண்டு புதிய F-35 போர் விமானங்களைக் கனடா பெற்றுக்கொண்டுள்ளது.
மாணவர் சக்தியால் வென்ற ஜனநாயகம்: செர்பியாவில் ஒரு தசாப்த கால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது!
ஐரோப்பிய நாடான செர்பியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் பிரம்மாண்ட போராட்டங்களைத் தொடர்ந்து, கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த அதிபர் அலெக்ஸாண்டர் வுசிக்கின் (Aleksandar Vučić) ஆட்சி அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.
"அமைதியை விரும்புபவர்கள் இந்தியர்கள்": ஜெர்மனி பயணத்தின் போது பியூஷ் கோயல் புகழாரம்!
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் எப்போதும் வன்முறையிலோ அல்லது பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தும் செயல்களிலோ ஈடுபடுவதில்லை என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமித் ஷா தலைமையில் பா.ஜ.க பேரணி; "கும்பல் அரசியலுக்கு முடிவுகட்டுவோம்" என முழக்கம்!
ஜனநாயகம் காப்போம், கும்பல் மற்றும் குடும்ப அரசியலை ஒழிப்போம்" என்ற முழக்கத்துடன், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பாரதிய ஜனதா கட்சி பிரம்மாண்ட பேரணியை நடத்தியுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




