வலிகாமம் வடக்கில் கொந்தளிப்பு: இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை மீட்க மக்கள் தீவிர போராட்டம்!

வலிகாமம் வடக்கில் கொந்தளிப்பு: இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை மீட்க மக்கள் தீவிர போராட்டம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி, மயிலிட்டி, வசாவிளான் மற்றும் பலாலிச் சந்தி பகுதிகளில் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, பலாலிச் சந்தி மற்றும் வசாவிளான் பகுதிகளில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்று வரும் காணி விடுவிப்புப் போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் நேரில் கலந்துகொண்டனர்.தமிழர் வரலாறு
பலாலிச் சந்தியில் தொடர்ச்சியாக 10 வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட அவர்கள், தமது பூர்வீக காணிகளை மீண்டும் பெற்றுக்கொள்ளக் கோரி போராடி வரும் மக்களுக்கு தமது முழுமையான ஆதரவை தெரிவித்தனர்.
பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் தனியார் காணிகளை உரிய முறையில் விடுவித்து, மக்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறுவதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
செந்தில் குமார்
முதன்மை ஆசிரியர் (Chief Editor)கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
எவன்கார்ட் விவகாரம்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் சி.ஐ.டி.யிடம் முறைப்பாடு செய்ய கோப் குழு தீர்மானம்!
இலங்கை கடற்படையுடன் இணைந்து 'ரக்னா அரக்ஷக லங்கா' பாதுகாப்பு நிறுவனம் முன்னெடுத்து வந்த கடல்சார் பாதுகாப்பு சேவையில் எவன்கார்ட் (Avant-Garde) நிறுவனத்தைச் சேர்த்துக் கொண்டமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழு (கோப் குழு) தெரிவித்துள்ளது.
நாட்டிற்குள் கடத்தப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: சீனப் பிரஜைகள் இருவர் கைது!
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டது: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு!
நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த தியாகி திலீபனின் உருவச்சிலை, இன்று காலை பொலிஸாரால் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல இடங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




