
வேலணை தம்பதியினரின் மர்ம மரணம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் தீவிர விசாரணை. குறித்த பிரத்யேக ஒளிப்படம்
யாழ்ப்பாணம் வேலணை - செட்டிபுலம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இருவரின் சடலங்கள் உருக்குலைந்த நிலையில் இன்று மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம் குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஊர்காவற்றுறை பொலிஸார், சோதனைகளை மேற்கொண்ட போது வீட்டின் உள்ளிருந்து ஆண் மற்றும் பெண் ஒருவரின் சடலங்களை மீட்டுள்ளனர்.
சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் 73 மற்றும் 74 வயதுடைய வயோதிப தம்பதியினர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் மற்றும் உயிரிழப்பு இடம்பெற்ற காலப்பகுதி தொடர்பான தகவல்கள் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ஊர்காவற்றுறை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




