சுவிஸ்: 19°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

எவன்கார்ட் விவகாரம்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் சி.ஐ.டி.யிடம் முறைப்பாடு செய்ய கோப் குழு தீர்மானம்!

செந்தில் குமார்•27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
எவன்கார்ட் விவகாரம்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் சி.ஐ.டி.யிடம் முறைப்பாடு செய்ய கோப் குழு தீர்மானம்!

எவன்கார்ட் விவகாரம்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் சி.ஐ.டி.யிடம் முறைப்பாடு செய்ய கோப் குழு தீர்மானம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கை கடற்படையுடன் இணைந்து 'ரக்னா அரக்ஷக லங்கா' பாதுகாப்பு நிறுவனம் முன்னெடுத்து வந்த கடல்சார் பாதுகாப்பு சேவையில் எவன்கார்ட் (Avant-Garde) நிறுவனத்தைச் சேர்த்துக் கொண்டமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழு (கோப் குழு) தெரிவித்துள்ளது.

ரக்னா லங்கா நிறுவனத்தின் அதிகாரிகள் அண்மையில் கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த போதே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

குறித்த கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எவன்கார்ட் தனியார் நிறுவனத்தை இணைத்துக் கொண்டமையினால் அரசாங்கத்திற்குப் பெருந்தொகை பணம் இழக்கப்பட்டுள்ளதாகக் கோப் குழுவின் தலைவர் வைத்தியர் நிஷாந்த சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், எந்தத் தரப்பின் தேவையின் பேரில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது எனப் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் இதன்போது தீவிர கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த கோப் குழுவின் தலைவர், எவன்கார்ட் நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும் உடனடியாக ரத்து செய்வதற்கும், இதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார். மேலும், இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய நபர்களுக்கு எதிராகச் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
செந்தில் குமார்

செந்தில் குமார்

முதன்மை ஆசிரியர் (Chief Editor)

கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

நாட்டிற்குள் கடத்தப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: சீனப் பிரஜைகள் இருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டது: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு!

நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த தியாகி திலீபனின் உருவச்சிலை, இன்று காலை பொலிஸாரால் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாட்டில் பல இடங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையில் சிலிண்டர் வெடித்ததில் வைத்தியசாலை ஊழியர்கள் ஏழு பேர் காயம்!

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

26 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm