சுவிஸ்: 16°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

எரிபொருள் விலை உயர்வின் சுமையை மக்கள் மீது சுமத்த மாட்டோம்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

VIGNESWARAN ABIRAMY•13 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
எரிபொருள் விலை உயர்வின் சுமையை மக்கள் மீது சுமத்த மாட்டோம்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

எரிபொருள் விலை உயர்வின் சுமையை மக்கள் மீது சுமத்த மாட்டோம்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

மத்திய கிழக்கின் போர்ப் பதற்றங்களால் எரிபொருள் விலை உலகளவில் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், அதன் முழுச் சுமையையும் மக்கள் மீது சுமத்தாமல் நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலக சந்தை விலை உயர்வுக்கு ஏற்ப நாமும் விரைவாகவும் பெருமளவிலும் எரிபொருள் விலையை உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் 57 பில்லியன் ரூபாயையும், தற்போது 41 பில்லியன் ரூபாயையும் திறைசேரியிலிருந்து ஒதுக்கி, விலை உயர்வின் சுமையை மக்களிடம் கொண்டு செல்லாமல் அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த 4-5 மாதங்களுக்குள் மட்டும் சுமார் 100 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை அரசாங்கம் மக்கள் மீது சுமத்தாமல் தாங்கிக்கொண்டுள்ளது.

அரசாங்கம் என்ற ரீதியில் திறைசேரியைச் சரியாக முகாமை செய்து, இவ்வாறானதொரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் மக்களின் வரிப் பணத்தின் மூலம் மக்கள் மீதான சுமையைக் குறைப்பதே எமது கடமையாகும். திறைசேரியால் தாங்கிக்கொள்ளக்கூடிய உச்ச வரம்பு வரை மக்களுக்காக நாம் தொடர்ந்தும் நிவாரணங்களை வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

A-9 வீதி மேம்பாட்டிற்கான ரூ. 1 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!

கண்டி – யாழ்ப்பாணம் A9 வீதியின் ஒரு பகுதியை அகலப்படுத்தி மேம்படுத்துவதற்காக, 1.07 பில்லியன் ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை ‘டுடாவே பிரதர்ஸ் (பிரைவேட்) லிமிடெட்’ (Tudawe Brothers (Pvt.) Ltd.) நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

13 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

'சிரிலிய சவிய' நிதி மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்‌ஷவை, எதிர்வரும் அக்டோபர் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

2027 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.7% ஆக குறையும்: IMF புதிய கணிப்பு!

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 2027 ஆம் ஆண்டில் 3.7 சதவீதம் வரை மட்டுமே அடையும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது அண்மைய 'உலக பொருளாதார தொலைநோக்கு' அறிக்கையில் கணித்துள்ளது.

13 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட மூவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm