கதிர்காமம் – புத்தல வீதியில் காட்டு யானை தாக்குதல்: தனியார் பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்!

கதிர்காமம் – புத்தல வீதியில் காட்டு யானை தாக்குதல்: தனியார் பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
கதிர்காமம் – புத்தல வீதியில் காட்டு யானை ஒன்று தனியார் பேருந்தை தாக்கியதால் அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கதிர்காமம் – புத்தல வீதியில் காட்டு யானை ஒன்று தனியார் பேருந்தை தாக்கியதால் அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (03) காலை 11.00 மணியளவில் கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிர்காமம் – புத்தல வீதியில் மின்சார வேலி காவலரணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
சிலாபத்திலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து, புத்தல – கதிர்காமம் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த போதே வீதியிலிருந்த காட்டு யானை அதனை தாக்கியுள்ளது.
யானையின் தாக்குதலால் பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளதுடன், விபத்து இடம்பெற்ற போது அதில் சுமார் 40 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த சுமார் 10 பேர் சிகிச்சைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கயல்
செய்தியாளர்அக்கினி செய்திகளின் சர்வதேச செய்தி நிருபர். ஐரோப்பிய நாடுகள் மற்றும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் நிகழ்வுகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




