உக்ரைனில் பயணிகள் பேருந்துகள் மீது ரஷ்யா நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு சுவிட்சர்லாந்து கடும் கண்டனம்!
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் கிராமாடோர்ஸ்க் நகரில், பயணிகள் சென்ற இரு பேருந்துகள் மீது ரஷ்ய ராணுவம் கொடூர குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 30 பயணிகள் உயிரிழந்ததுடன், 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.












