582 மனித எச்சங்கள் மீட்பு: செம்மணி விவகாரத்தில் சர்வதேச விசாரணைக்குக் கோரிக்கை!

582 மனித எச்சங்கள் மீட்பு: செம்மணி விவகாரத்தில் சர்வதேச விசாரணைக்குக் கோரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
யாழ்ப்பாணம் செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து 582 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை மற்றும் சர்வதேச தடயவியல் உதவி ஆகியவை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் என்ன நிலைப்பாட்டை குறிப்பிட்டுள்ளது? என சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.
உள்ளக பொறிமுறையை பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக புறக்கணித்து வரும் நிலையில் உள்ளக பொறிமுறை ஊடாகவே தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் சர்வதேச அரங்கில் குறிப்பிடுகிறது.
இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு எவ்வாறு நீதி கிடைக்கும். பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அரசாங்கத்தின் நகர்வுகள் அதிருப்திக்குரியதாகவே காணப்படுகிறது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவிதித்தர் .

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
'Gen Z' மற்றும் 'மிலேனியல்' தலைமுறையைக் கவராவிட்டால் வெற்றி சாத்தியமில்லை: ரணில் சுட்டிக்காட்டு!
தற்போதைய கட்சி அரசியலில் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றி இனிமேலும் முன்னோக்கிச் செல்ல முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் மற்றும் கலாச்சாரத்தைப் பேணித் திட்டங்களைச் செயல்படுத்த புதிய பொறிமுறை உருவாக்கம்!
அநுராதபுரம் புனித பூமியில் அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தும்போது, பாரம்பரியங்களைப் பாதுகாத்து முறையான தீர்மானங்களை எடுப்பதற்காக புதிய ஜனாதிபதி ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதல் எச்சரிக்கை: 1,45,000 முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு நிகரான உழைப்பு இழப்பு!
புவி வெப்பமயமாதல் மற்றும் பணியிடங்களில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக, 2040ஆம் ஆண்டிற்குள் இலங்கைக்குச் சுமார் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு நிகரான உழைப்பு உற்பத்தித்திறன் இழப்பு ஏற்படக்கூடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் விஜித் மலல்கொட நியமனம்!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




