ஜனாதிபதி அலுவலகத்தில் Clean Colombo திட்டத்தின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல்

ஜனாதிபதி அலுவலகத்தில் Clean Colombo திட்டத்தின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் குறித்த பிரத்யேக ஒளிப்படம்
‘Clean Sri Lanka’ - ‘Clean Colombo’ திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் சந்திப்பு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (09) முற்பகல் நடைபெற்றது.
மலசல கட்டமைப்பு மற்றும் நீர்ப்பாசனக் கால்வாய்களைப் புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், சூழலை அழகுபடுத்துதல், கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல திட்டங்கள் இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் செயற்பாட்டுத் திட்டங்கள் தொடர்பாக இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
கொழும்பு மாநகர சபை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், இலங்கை ரயில்வே திணைக்களம் ஆகியன மேற்படி திட்டத்துடன் தொடர்புடைய பிரதான நிறுவனங்களாகும். இந் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
மேலும், ‘Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் சமூக நல்வாழ்வு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் ஒழுக்கவிழுமிய மறுமலர்ச்சிக்காக பிரஜைகளின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளை, கொழும்புக்குரிய திட்டங்களுடன் ‘Clean Colombo’ திட்டத்தின் கீழ் ஒன்றிணைக்க வேண்டிய அவசியம் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
ஜனாதிபதி மேலதிக செயலாளர் (Clean Sri Lanka) எஸ்.பி.சி. சுஜீஸ்வர உள்ளிட்ட 'Clean Sri Lanka' செயலகத்தின் பிரதிநிதிகள், கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன் உள்ளிட்ட கொழும்பு மாநகர சபையின் பிரதிநிதிகள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிநிதிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிநிதிகள், இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதிநிதிகள், இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
'Gen Z' மற்றும் 'மிலேனியல்' தலைமுறையைக் கவராவிட்டால் வெற்றி சாத்தியமில்லை: ரணில் சுட்டிக்காட்டு!
தற்போதைய கட்சி அரசியலில் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றி இனிமேலும் முன்னோக்கிச் செல்ல முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் மற்றும் கலாச்சாரத்தைப் பேணித் திட்டங்களைச் செயல்படுத்த புதிய பொறிமுறை உருவாக்கம்!
அநுராதபுரம் புனித பூமியில் அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தும்போது, பாரம்பரியங்களைப் பாதுகாத்து முறையான தீர்மானங்களை எடுப்பதற்காக புதிய ஜனாதிபதி ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதல் எச்சரிக்கை: 1,45,000 முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு நிகரான உழைப்பு இழப்பு!
புவி வெப்பமயமாதல் மற்றும் பணியிடங்களில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக, 2040ஆம் ஆண்டிற்குள் இலங்கைக்குச் சுமார் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு நிகரான உழைப்பு உற்பத்தித்திறன் இழப்பு ஏற்படக்கூடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் விஜித் மலல்கொட நியமனம்!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




