சுவிஸ்: 9°C
•
இலங்கை: 27°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

அபராதம் செலுத்த முடியாமல் சிறையில் 1,500 கைதிகள்: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார!

VIGNESWARAN ABIRAMY•21 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
அபராதம் செலுத்த முடியாமல் சிறையில் 1,500 கைதிகள்: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார!

அபராதம் செலுத்த முடியாமல் சிறையில் 1,500 கைதிகள்: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சிறிய தொகையிலான அபராதப் பணத்தைக் கூடச் செலுத்த முடியாத காரணத்தினால், நாட்டில் சுமார் 1,454 கைதிகள் சிறைச்சாலைகளில் உள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அமைச்சர் வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, 10,000 முதல் 15,000 ரூபாய் வரையிலான குறைந்த அபராதத் தொகையைச் செலுத்த வழியின்றி 421 கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 15,000 முதல் 25,000 ரூபாய் வரை செலுத்த முடியாமல் 220 பேரும், 25,000 முதல் 50,000 ரூபாய் வரை செலுத்த முடியாமல் 361 பேரும் சிறையில் உள்ளனர்.

அத்துடன், நாட்டில் தற்போது மொத்தமாக 10,611 கைதிகளும், 28,408 சந்தேகநபர்களும் சிறைகளில் உள்ளதாகவும், வயதுப் பிரிவுகளின் அடிப்படையில் 30 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே அதிகளவில் சிறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை விடுவிப்பது குறித்துத் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், அபராதம் செலுத்த முடியாத நிலைமை ஒரு பெரிய குற்றமாக இருக்க முடியாது எனக் குறிப்பிட்டார். தொண்டு நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் முன்வந்து இத்தகைய கைதிகளின் அபராதத் தொகையைச் செலுத்தி அவர்களை விடுவிக்க விரும்பினால், சிறைச்சாலைத் துறை அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல்: 28 ஆம் திகதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயல், இலங்கையை நோக்கி நேரடியாக வராவிட்டாலும், அதன் மறைமுகத் தாக்கங்கள் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற வானிலை நிலவி வருகின்றது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பொருளாதாரத்தில் சாதகமான மாற்றம்: நாட்டின் மொத்த ஏற்றுமதி 5.04 சதவீதம் அதிகரிப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.04 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நுரைச்சோலை மின்நிலையத்தின் 2ஆவது இயந்திரம் திடீர் பழுது காரணமாக முடக்கம்!

புத்தளம், நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் திடீரெனத் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை!

நாட்டில் தொடர்ந்து நிலவிவரும் சீரற்ற காலநிலை மற்றும் கனமழை காரணமாக, நாளை (27ஆம் திகதி) செவ்வாய்க்கிழமை நாட்டின் அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm