சுவிஸ்: 10°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

பொருளாதாரத்தில் சாதகமான மாற்றம்: நாட்டின் மொத்த ஏற்றுமதி 5.04 சதவீதம் அதிகரிப்பு!

VIGNESWARAN ABIRAMY•26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
பொருளாதாரத்தில் சாதகமான மாற்றம்: நாட்டின் மொத்த ஏற்றுமதி 5.04 சதவீதம் அதிகரிப்பு!

பொருளாதாரத்தில் சாதகமான மாற்றம்: நாட்டின் மொத்த ஏற்றுமதி 5.04 சதவீதம் அதிகரிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.04 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, கடந்த ஆண்டில் 12.96 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த மொத்த ஏற்றுமதி வருமானம், நடப்பாண்டில் 13.61 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது. இது நாட்டின் பண்டங்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதித் துறைகளில் தொடர்ந்து நிலவி வரும் நிலையான வளர்ச்சியைக் காட்டுவதாக அமைந்தது.

இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) ஆகியவை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் பண்ட ஏற்றுமதிகள் மட்டும் 5.35 சதவீதம் அதிகரித்து, 10.76 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளன.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பண்ட ஏற்றுமதி மூலம் 10.22 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே ஈட்டப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டின் இந்த வளர்ச்சி நாட்டின் பொருளாதார மீட்சிக்கு வலுசேர்ப்பதாக அமைந்திருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

நுரைச்சோலை மின்நிலையத்தின் 2ஆவது இயந்திரம் திடீர் பழுது காரணமாக முடக்கம்!

புத்தளம், நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் திடீரெனத் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை!

நாட்டில் தொடர்ந்து நிலவிவரும் சீரற்ற காலநிலை மற்றும் கனமழை காரணமாக, நாளை (27ஆம் திகதி) செவ்வாய்க்கிழமை நாட்டின் அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

24 மணிநேரத்தில் கொட்டித் தீர்த்த மழை: புத்தளம், குளியாப்பிட்டிய பகுதிகளில் அதிகளவு மழைவீழ்ச்சி!

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாட்டில் டெங்கு பரவல் தீவிரமடைவு: 28 சுகாதாரப் பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அறிவிப்பு!

நாடு முழுவதும் 28 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு நோய் பரவும் அதிஅபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm