சுவிஸ்: 21°C
•
இலங்கை: 29°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

இலங்கையில் பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு!

செந்தில் குமார்•23 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இலங்கையில் பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு!

இலங்கையில் பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கையின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 472 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1658 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலையால் கண்டி, மாத்தளை, நுவரெலியா, மாத்தறை, அம்பாறை, அனுராதபுரம், கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களே பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அண்மைய அறிக்கையின்படி, இந்த பாதகமான வானிலையால் ஒரு உயிரிழப்பு சம்பவமும் பதிவாகியுள்ளது.

ஒரு வீடு முழுமையாகவும், 102 வீடுகள் பகுதியளவிலும் சேதடைந்துள்ளன.

26 குடும்பங்களைச் சேர்ந்த 94 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
செந்தில் குமார்

செந்தில் குமார்

முதன்மை ஆசிரியர் (Chief Editor)

கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

எவன்கார்ட் விவகாரம்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் சி.ஐ.டி.யிடம் முறைப்பாடு செய்ய கோப் குழு தீர்மானம்!

இலங்கை கடற்படையுடன் இணைந்து 'ரக்னா அரக்ஷக லங்கா' பாதுகாப்பு நிறுவனம் முன்னெடுத்து வந்த கடல்சார் பாதுகாப்பு சேவையில் எவன்கார்ட் (Avant-Garde) நிறுவனத்தைச் சேர்த்துக் கொண்டமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழு (கோப் குழு) தெரிவித்துள்ளது.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாட்டிற்குள் கடத்தப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: சீனப் பிரஜைகள் இருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டது: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு!

நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த தியாகி திலீபனின் உருவச்சிலை, இன்று காலை பொலிஸாரால் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாட்டில் பல இடங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm