2028 ஒலிம்பிக் தங்கப் பதக்க இலக்கு: ஈட்டி எறிதல் உலக சாம்பியன் ருமேஷ் தரங்க பத்திரகேவுடன் கைகோர்த்தது சிஐசி ஹோல்டிங்ஸ்!

2028 ஒலிம்பிக் தங்கப் பதக்க இலக்கு: ஈட்டி எறிதல் உலக சாம்பியன் ருமேஷ் தரங்க பத்திரகேவுடன் கைகோர்த்தது சிஐசி ஹோல்டிங்ஸ்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரும், இந்த வருடம் ஈட்டி எறிதல் உலக சம்பியனுமான ருமேஷ் தரங்க பத்திரகேவின் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழா பயணத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அவரது உத்தியோகபூர்வ ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வு பங்களாராக தேசத்தின் முன்னணி பன்முக நிறுவனக் குழுமமான சிஐசி ஹோல்டிங்ஸ் பிஎல்சி (CIC Holdings PLC) கைகோர்த்துள்ளது.
லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுக்க இலக்கு வைத்துள்ள ருமேஷின் பயணத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இக் கூட்டாண்மை அமைந்துள்ளது.
இந்தக் கூட்டாண்மை ஒரு சாதாரண விளையாட்டு அனுசரணை என்பதற்கு அப்பால் சர்வதேச அரங்கில் மிக உயர்ந்த நிலையை எட்டுவதற்கு தேவையான பல வருடப் பயிற்சி, சுய ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றுடன் ருமேஷிற்குப் பக்கபலமாக நிற்பதையே வெளிப்படுத்துகிறது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இங்கிலாந்திடம் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது இலங்கை!
லாகூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு இமாலயச் சுவரான 386 ஓட்டங்களைக் குவித்தது! அந்த அணியில் பென் டக்கெட் அபாரமாக ஆடி 167 ஓட்டங்களையும், டொம் பான்டன் 74 ஓட்டங்களையும் விளாசினர். இலங்கை தரப்பில் அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
28 வயதில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்!-
அயர்லாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பென் வைட் , தனது 28 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கைக்கு 387 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இலங்கையணி வெற்றி பெறுவதற்கு 387 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிய பரா தங்கப் பதக்க வீரர் நீராஜ் யாதவ் தற்கொலை
ஆசிய பரா விளையாட்டு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களை சுவீகரித்த இந்தியாவின் மாற்றுத்திறனாளி நீராஜ் யாதவ், தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




